Saturday, June 9, 2007

என்னவள்



குறிப்பு: இந்தக் கவிதை பிரிட்டனிலிருந்து வெளிவரும் நிலாச்சாரல் , தமிழ் சிஃபி, கூடல் மற்றும் மரத்தடி பத்திரிக்கையில் பிரசுரமாகியது.

இரா உணவு முடித்து
துப்பட்டிக்குள் தஞ்சம் புகுந்து
துயில் விழையும் வேளையில்
தூங்க விட மறுக்கிறாய்

எத்தனையோ நினைத்திருந்தேன்
என்னவென்று மறந்தே போனேன்
எப்போதும் உன் நினைவால்
என் கனவெல்லாம் கலைந்தே போனேன்

கண் மூடித் தூங்கும்போது
காதுக்குள்ளே ரீங்காரமிடுகிறாய்
கால் சதையைக் கடித்து
கதண்டு கதண்டாய் வீங்க வைக்கிறாய்

ஏய்... இரக்கமற்ற கொசுவே
என்னை முழுவதுமாய்த் தந்துவிட்டேன்
என்னவளை மட்டுமாவது உறங்கவிடு!

4 comments:

முரளிகண்ணன் said...

//ஏய்... இரக்கமற்ற கொசுவே
என்னை முழுவதுமாய்த் தந்துவிட்டேன்
என்னவளை மட்டுமாவது உறங்கவிடு!
//
நல்ல மனம்

Anonymous said...

VERY VERY GOOD.

Anonymous said...

கொண்டவள் கடியைக் காட்டிலும் கொசுக்கடியே மேல் போலிருக்கிறதுஅழகான அன்பான கவிதை

அன்புடன்
நந்திதா

Anonymous said...

Nice Kavithai, made me read it couple times.