Friday, June 1, 2007

கல்விமான்கள்

குறிப்பு: இந்தக் கவிதை வார்ப்பு பத்திரிக்கையில் பிரசுரமாகியது.

என் தாயின் மடிதனிலே
ஏழாவது மகவு நான்
என் முன்னே ஆறு பேர்
என்னோடு ஏழு பேர்

பெற்றோர் எடுத்தனர் முடிவு அன்று
பெத்ததெல்லாம் போதும் என்று
எட்டாவதாய் இனியொன்று
எக்காலமும் வேண்டாம் என்று

ஏழு பேர் இருந்தபோதும்
என்னைப் போல் எவருமில்லை
ஏழும் ஏழு விதம்
எனக்கென தனி விதம்

கடைக்குட்டி ஆயினேன்
கடை கடையாய் ஓடினேன்
கடனாய்க் காபி வாங்கினேன்
தாயின் தலைவலி தீர உதவினேன்

செருப்பில்லா பாதங்கள்
தெருவெல்லாம் என் போன்ற சிறுவர்கள்
நாலு கிலோ மீட்டர் நடையைக் கட்டி
நாங்கள் கற்றோம் நாலெழுத்து

காலை சென்றேன் பள்ளிக்கு
கிழிஞ்ச ட்ரவுசரோடும்
கிளுகிளுக்கும் அட்டை போட்ட
கிழிஞ்சு போன நோட்டோடும்

பள்ளிக் கூடம் முடிந்து வந்து
பம்பரங்கள் சுற்றினேன்
பால்கரக்கும் பசு மாட்டினை
பக்குவமாய்க் குளிப்பாட்டினேன்

காலம் கடந்திட்டாலும்
கடந்த காலம் மறக்கவில்லை
கற்றறிந்த கல்வி அன்று
கஞ்சி ஊத்துது எனக்கு இன்று

கல்வி கற்றுத் தந்திட்டக்
கல்விமான்களை நினைக்கிறேன்
காலமெல்லாம் நன்றி சொல்லி
களிப்புடனே வாழ்கிறேன்

10 comments:

naanjil said...

Dear Bennedict:
Excellent poems. Thanks
Keep it up

donilourdu said...

Hi this is Doni .
pleasure to see your articles on Net.
Nice articles.Try more.......!

Anonymous said...

Very good buddy.

Anonymous said...

அட அட அடடா! நீங்களும் ஏழாவது ஆளா ஜான் சார்.
அம்மாவிற்கு நல்ல பிள்ளை போலும்!
கடந்த காலத்தை மறந்தால் வாழ்க்கை இனிக்காது! அது சுமையோ சுகமோ!! நினைக்கையில்
இதம்!!.

கல்வியே எதிர்காலத்தை நிர்ணயிக்கும்! அதனால் தான் ஔவையும் "பிச்சை புகினும்
கற்கை நன்றே" என்றாள்...

நீங்கள் கவிதையில் கலக்குறீங்க :))

Anonymous said...

ரொம்ப உருக்கமாக இருக்குங்க.. அனைத்து வரிகளிலும் வலியை உணர முடிகிறது..

Anonymous said...

மூத்த மகனாக பிறந்தும் நமக்கும் இதே கதைதான்

ஆனால் க‌டைகுட்டிகள் கூட புத்திசாலிகளாக இருப்பார்கள் என்று இன்று அறிந்தேன்

Anonymous said...

நன்றி உணர்வுள்ள நல்ல கவிதை தந்தமைக்கு வாழ்த்துக்கள்.

Anonymous said...

A beautiful memory!!!

Anonymous said...

எந்நன்றி கொன்றாற்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகற்கு.. வள்ளுவம்.

�'ரு இளமைப் பதிவு என 15 பதிவுகளில் இடவேண்டியதை �'ரு சிறிய கவிதையில் கொண்டுவந்துவிட்டீர்கள்.
//கல்வி கற்றுத் தந்திட்டக்> கல்விமான்களை நினைக்கிறேன்> காலமெல்லாம் நன்றி சொல்லி> களிப்புடனே வாழ்கிறேன்//

இன்றும் நான் எனது கிராமத்திற்கு செல்லும்போது எனது ஆசிரியர்களை கண்டு எனது வணக்கங்களை தெரிவித்துவிட்டு வருவதை எனது வழக்கமாக கொண்டிருக்கிறேன். எனது எண்ணங்களை �'த்த இன்னொருவர் நமது குழுமத்தில்..

வாழ்த்துக்கள் ஜான்...

ஜெயக்குமார்

Anonymous said...

ஜான் அவர்களுக்கு,
உங்கள் எழுதுகோல் யாராவது நன்றிப் பரிசாக வந்ததுவோ.“அக்கா எனும் “ கவிதையில் பாசத்தால் அவள் செய்த தியாகத்துக்குஓர் நன்றி மடல். இப்பொழுது “கல்விமான் “ உங்கள் நன்றிக்குப் பாத்திரமாகியுள்ளார்.பஞ்சுப் பாதங்கள் நோக, பள்ளிக்குச் சென்று படித்ததனால்பசிக்குக் கஞ்சி கிடைத்தது. ஓர் எளியவணின் பசிக்கு உணவு கிடைப்பதற்கு ஒப்பான ஒரு செயல்இருக்க முடியுமா/கல்வி கற்றுக் கொடுத்தவனுக்கு நன்றி கூறும் உங்களுக்குத் தமிழ் நன்றிகூறும். அழகு வார்த்தைகளில் கவிதை படைப்பதைவிட அர்த்தமுள்ள காட்சிகளுக்கு அவள் வடிவமானாள்உம் கவிதை தமிழுக்கு ஓர் பாமாலை.கவிதைக் கருவிற்கும், நன்றிக்கு நீங்கள் கொடுக்கும் மரியாதைக்கும்என் மனப்பூர்வமான பாராட்டுதல்கள்

சீதாலட்சுமி