Sunday, July 1, 2007

பாவப்பட்ட ஜென்மங்கள்


குறிப்பு: இந்தக் கவிதை நிலாச்சாரல், மற்றும் தமிழோவியம் இதழ்களில் பிரசுரமாகியது








வீங்கிப் புண்ணான கழுத்தோடு
விளக்கிச் சொல்ல வாயின்றி
ஓட்டுபவனின் உதைக்குப் பயந்து
ஓட்டமாய் வண்டி இழுத்துச் செல்லும்
ஒற்றை மாடு

தன்னைப் பெற்ற ஏழைக் கூலித் தாயோ
தரிசு நிலத்திலே பசுவுக்குப் புல் புடுங்க
பசியால் துடிதுடிக்கும் பத்துமாதத் தங்கையை
பாதி இடுப்பிலே தூக்கிச் சுமக்கும்
பாவாடை கிழிந்த மூன்று வயது அக்கா

பச்சைப் பசேல் காட்டுக்குள்ளே
பாடிப் பறக்க முடியாமல்
வெட்டப்பட்ட சிறகுகளுடன்
பெட்டிக்குள் அடைக்கப்பட்ட
பச்சைக்கிளி

பத்து மாதம் சுமந்து பெற்ற
பச்சைக் குழந்தையை
கால் வயிற்றுக் கஞ்சிக்காக
கால் காசுக்கு விற்றிட்ட
ஏழைத் தாய்

எத்தனையோ ஜென்மங்களை
எழுதிடத்தான் முடியலை
என் கண்ணில் பட்டவற்றை
எழுதாமல் இருக்கவும் முடியலை

உன் கண்ணில் எதிர்பட்டால்
உன்னால் முடியும் செயல்படு
உன் நண்பன் கிளி வளர்த்தால்
உடனே சொல்லித் திருத்திடு!

5 comments:

Anonymous said...

படிப்பவர் நெஞ்சத்தைப் பறிக்கும் பஞ்சாமிருத வரிகள்.

Anonymous said...

Oi, achei teu blog pelo google tá bem interessante gostei desse post. Quando der dá uma passada pelo meu blog, é sobre camisetas personalizadas, mostra passo a passo como criar uma camiseta personalizada bem maneira. Até mais.

Anonymous said...

உயிரினங்ளின் உணர்ச்சிகளையும்
உணர்வுகளையும் புரிந்து,
சுதந்திர உரிமை கோரும்
உங்கள் பார்வை பாராட்டுக்குரியதே!!

- ரவிக்குமார்

Anonymous said...

Let me tell you a true story.

I built my house in India, Madurai in the year 1982. The first thing I did was I put a nice aquarium in the reception area. I really enjoyed more than my cat would have a fit about it. I call it wrathful impotence.

However one day some friend of mine came to see me and told me it is against the law of nature to imprison the fishes. I released them and that was my last aquarium. My desire for aquarium did not end and was subconscious and recently i bought from Belk store an animated one and I keep it in front of me.

I truly appreciate your feelings on the parrot.

Anonymous said...

Comment in Tamil :
னல்ல முயட்சி தொடர வாழ்த்துக்கழ்

nalla muyatchi thodara vaazththukkazh

S.Nithiananthan
Sri Lanka