பந்த் - மாற்றுத் தீர்ப்பு என்ன?
பொது மக்களின் அன்றாட வாழ்க்கை எந்தவிதத்திலும் பாதிக்கப்படக் கூடாது என்று கூறி, சேது சமுத்திர திட்டம் தொடர்பாக ஆளும் திமுக கூட்டணி அறிவித்திருந்த முழு அடைப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது வரவேற்கத்தக்கதே. நீதிமன்ற உத்தரவால் ஆளும் கூட்டணி ஆத்திரமடைந்ததும், உத்தரவைத தமிழக அரசு உணர்வுபூர்வமாகச் செயல்படுத்தவில்லை என்பதும் வெளிப்படையான உண்மை. அதற்காக, குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டியிருக்கும் என்று நீதிமன்றம் விடுத்த எச்சரிக்கை, நீதிமன்றம் தனது வரம்பை மீறுகிறதோ என்று நடுநிலையாளர்களும் கேட்கும்படி செய்துவிட்டது. பந்த் நடத்திய அரசியல் கட்சிகள் நீதிமன்றத்தை குற்றம் சாட்ட வாய்ப்பளித்துவிட்டது. இதுபோன்ற கடும் எச்சரிக்கையை காவிரி ஆறு மற்றும் முல்லைப் பெரியாறு விசயங்களில் முறையே கர்நாடகா மற்றும் கேரள அரசுகளுக்கு எதிராக ஏன் நீதிமன்றம் எடுக்கவில்லை என்ற கேள்விக்கு இடமளித்துவிட்டது. "குடியரசுத் தலைவர் ஆட்சி" என்ற அளவுக்குச் செல்லாமல், நீதிமன்றத் தீர்ப்பை மீறியவர்கள் "உண்மையிலேயே" தண்டிக்கப்படும் விதமாக, வேறு எந்தமாதிரியான தீர்ப்பினை நீதிபதிகள் வழங்கியிருக்கமுடியும்? நீங்களே உச்ச நீதிமன்ற நீதிபதியாக மாறி தீர்ப்பு வழங்குங்கள்...
2 comments:
//இதுபோன்ற கடும் எச்சரிக்கையை காவிரி ஆறு மற்றும் முல்லைப் பெரியாறு விசயங்களில் முறையே கர்நாடகா மற்றும் கேரள அரசுகளுக்கு எதிராக ஏன் நீதிமன்றம் எடுக்கவில்லை என்ற கேள்விக்கு இடமளித்துவிட்டது//
point..
May be they are also like politicians, playing it to the public. Like the movie Hero. Populist actions.
அளவுக்கு மீறி இந்த விஷயத்தை திசை திருப்பும் செயல் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
கொடும்பாவி எரிப்பது, சம்பந்தப்பட்ட பத்திரிகைத் தாளைக் கொளுத்துவது,
தீர்ப்பைக் கண்டித்து உண்ணாவிரதம் இருப்பது,சட்டமன்றத்தில் முடிவெடுத்து மாற்ருவோம் எனச் சவால் விடுவதெல்லாம் ஜனநாயகத்தில் எதிர்ப்பை அனுமதிக்கப்பட்ட நேர்மையான விஷயங்கள். அவை அவமதிப்பு ஆகது, உத்தரவை மதிக்கும் வரை.
ஆனால், தமிழகத்தில் நடந்தது அப்பட்டமான நாட்டின் இறையாண்மை எதிர்ப்புச் செயல்.
பந்தை ரத்து செய்துவிட்டு, உண்ணவிரதம் இருந்ததற்கு உச்சநீதிமன்றம் ஒன்றுமே
சொல்லவில்லை.
ஆனால், இல்லாத பந்திற்கு, மறைமுகமாக பஸ்களை ஓடவிடாமல் செய்து, கடைகளை அடைக்கச் சொல்லி கலவரம் செய்தது, அன்றாட அத்தியாவசியத் தேவைகள் பொதுமக்களுக்குக்
கிடைக்கவிடாமல் செய்தது எல்லாம், உச்சநீதி மன்றத்தின் கண்களில் தமிழக அரசின் செயலற்ற, செயலிழந்த தன்மையையே கட்டியது என்பதில் சிறிதும் ஐயமில்லை.
கர்நாடக, கேரள நிலைகளுடன் இதனை ஒப்பிடவே முடியாது.
*நீதிபதிகள் கருத்தில் தவறேதுமில்லை.*
Post a Comment