Sunday, December 16, 2007

உன் வருகை


பன்னிரெண்டு ஆண்டுக்கொருமுறை
பூக்கும் குறிஞ்சி மலர்
உன் வருகை அறிந்து
உடனடியாய் பூத்து குலுங்குகிறது


பதினேழு ஆண்டுக்கொருமுறை மட்டுமே
மண்ணைவிட்டு வெளிவரும்
வட அமெரிக்காவின்
சக்கேட்டா வண்டினமோ
உன் வருகை அறிந்து
உடன் எழுந்து வந்து
உன் வழியெங்கும் ரீங்காரமிடுகிறது


இருப்பதாக நான்
இன்றுவரை உணர்ந்திடாத என் இதயமோ
உன் வருகை அறிந்து
இருமடங்கு வேகமாய் துடிக்கிறது


கண்ணில் விழுந்த வேகத்தில்
கண்ணிமைக்கும் நேரத்தில்
காணாமல் தொலைந்துபோன
உனைக் கண்டுபிடிக்க...
இண்டர்போல் உதவி நாடி
இணையம் வழி விண்ணப்பித்தன
குறிஞ்சியும் சக்கேட்டாவும்...
தொலைந்து போன என் இதயம் தேட
தொட்டு வணங்கி விண்ணப்பித்தேன்
தேவதை உன்
காலடி மண்ணிடம்

2 comments:

Anonymous said...

வாரம் ஒருமுறை பதிவு போடும் ஆள் எங்கடா ரெண்டு வாரமா காணோம்னு பாத்தா இதயத்தை தேடி தேவதை பின்னாடி ஓடிக்கிட்டு இருந்திருக்கிங்க போல! தொலைந்து போன இதயம் கிடைக்க வாழ்த்துகள். கவிதை அருமை. கவிதை எழுதும் போது அறிவியல் கண் வேணும்னு சொல்வாங்க, அது உங்களோட குறிஞ்சி, சக்கேடா மூலம் தெரியுது. நிறைய காதல் கவிதை எழுதுங்க ...

Agathiyan John Benedict said...

இந்தக் கவிதையைப் பாராட்டின ஒரே ஆளு நீங்கதான் போங்க -:)

கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள், சிறப்புப் பட்டிமன்றங்கள் என அலைவதால் எழுதுவதற்கு நேரமின்றிப் போய்விட்டது. இன்னும் ஓரிரு வாரங்களுக்கு அப்படித்தான்.

காதலைப் பற்றி நிறையக் கவிஞர்கள் எழுதுவதால், கவனிக்க ஆளில்லாமல் (என்னைப் போல்) கிடக்கும் மற்ற சில தலைப்புகளைப் பற்றி எழுதிவருகிறேன். இருந்தாலும், நீங்கள் விரும்புவதால் இதுபோன்ற சில காதல் கிறுக்கல்களையும் அவ்வப்போது செய்கிறேன். ஆனால் "நிறைய" எதிர்பாக்காதீங்க -:)