கருணாநிதியின் கறுப்புக் கண்ணாடியில் கப்பலேறும் கலாச்சாரம்
"பூமிப் பந்தை புரட்டிப்போட்ட தமிழ் சினிமா" என்றெல்லாம் வருணிக்கப்பட்டாலும், உண்மையில் விநியோகஸ்தர்களுக்கு கோடிக் கணக்கில் நஷ்டத்தை ஏற்படுத்திய படம் தான் சிவாஜி. "Sivaji the BOSS" என்ற கோஷத்தோடு ஆரம்பிக்கப்பட்டு, "Sivaji the LOSS" ஆகிவிட்ட சிவாஜி படத்தின் வெள்ளி விழா நிகழ்ச்சிதான் நீங்கள் காணும் இந்தப் படம்.படம்: தினமணி
சினிமாவில் கச்சையாடை அணிந்து நடித்தாலும், விழாக்களுக்கு வரும்போது முக்காடு போடாத குறையாக முழுப் புடவை அணிந்து வருவதுதான் நடிகைகளின் வழக்கம். பாராட்டுக்கள். ஆனால் சிவாஜி படத்தின் LOSS இந்த நடிகையையும் பாதித்துவிட்டது போலும்!காசு பணம் இல்லாவிட்டாலும் கூட கடனை, உடனை வாங்கியாவது தனக்கு "உடை" வாங்கியிருந்திருக்கலாம். ஒருசில கந்து வட்டிக்காரர்களை வேண்டுமானால் இவர்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்கலாம்.
தமிழ், தமிழினம், பண்பாடு, பகுத்தறிவு, கலாச்சாரம், மானம், பாரம்பரியம் போன்ற கோஷங்களுக்காக தன் வாழ்நாளின் பெரும்பகுதியைக் கழித்த தலைவர் கலைஞர் என்பது பிறக்காத பிள்ளை கூட அறிந்த செய்தி. (அந்த அளவுக்கு விளம்பரப்படுத்தப் பட்டிருக்கிறது -:) உண்மை அப்படியிருக்க, இந்த "நடிகை" மட்டும் அதனை அறிந்திராமல் இருக்க வாய்ப்பில்லை. இப்படி ஒரு உடையை அணிந்துவந்து, ஒரு மாநிலத்தின் முதல்வராக இருப்பவரின் கண்(ணாடி) முன்னாடி காட்டி, இந்த உடைக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் பெற்றுத் தரச் சொல்கிறாரோ என்னவோ இந்த நடிகை! "பெண்ணுரிமை" படிப்படியாக நிலை நாட்டப்பட்டு வரும் வேளையில், இது போன்ற சில பெண்களின் செயல்பாடுகளைக் கண்டு கவலைப்படாமல் இருக்கமுடியுமா? பெண்ணுக்கு பெண்ணே எதிரி என்பது இதுதானோ? இந்தப் புகைப்படத்தைப் பற்றிய உங்களின் கருத்துக்களை அறிய விரும்புகிறேன். நன்றி.
8 comments:
//பெண்ணுக்கு பெண்ணே எதிரி என்பது இதுதானோ? இந்தப் புகைப்படத்தைப் பற்றிய உங்களின் கருத்துக்களை அறிய விரும்புகிறேன். நன்றி.//
ஜான் பீட்டர் பெனெடிக்ட் அய்யா,
நம்ம மஞ்ச துண்டு அய்யா ஒரு கேவலமான ஜொள்ளு பார்ட்டி என்பது உலகப் பிரசித்தமாயிற்றே;அதனால் தான் இந்த பொண்ணு இப்படி வந்து தமிழர் இனமான தலைவனுக்கு ஜால்ரா போடுது.வேறென்ன?
பாலா
avar karuppuk kannadi pottiruppathan ragasiyame ithu mathiri katchigalai paarkkaththaan. illai entraal manikkanakkil kutthaattam paarppaaraa?
vaazhga thamizhinam. maanaada! maaraada!!
//"பூமிப் பந்தை புரட்டிப்போட்டதமிழ் சினிமா" என்றெல்லாம்வருணிக்கப்பட்டால//
அடேங்கப்பா..பூமிப் பந்தை புரட்டிப் போட்ருச்சாமா... கொஞ்சம் �ஓவராத்தெரியல..
//ஆனால் சிவாஜி படத்தின் LOSS இந்த நடிகையையும் பாதித்துவிட்டது போலும்! காசு பணம் இல்லாவிட்டாலும் கூட கடனை, உடனை வாங்கியாவது தனக்கு "உடை" வாங்கியிருந்திருக்கலாம்//
:((((
அவர் பகுத்தறிவுப் பகலவன் வழி வந்தவர். எனவே பெண்ணீய விடுதலைக்கு இந்த உடை விடுதலையை அச்சாரமாக ஏற்றுக் கொண்டிருக்கலாம். எங்கே செல்லும் இந்த்ப் பாதை.. யாரோ யாரோ அறிவாரோ...
ஜேகே
This is really shocking! Though we cannot expect a culture that might be similar to Tamilars', atleast she should ve considered the significance of the stage as it was NOT for some "show off"... or may be she might ve thought herself as a grand daughter of CM and so she came in her school-age dress to get blessing of her grandfather!
Bare with me for the language i used, my e-kalappai needs servicing..
Karthikeyan
Kuwait
நண்பர் பாலா தமிழ் இன திராவிட
தலைவரை இளிவு படுத்த இதை ஒரு
வாய்ப்பாக எடுத்திருக்கிறார்.
பின் தங்கிய மக்களைத் தூக்கி நிறுத்திய
தலைவன்.
நெறியால் உணராது நீர்மையும் இன்றிச்
சிறியார் எளியர்ஆல் என்று பெரியாரைத் தங்கள் நேர் வைத்துத்
தகவுஅல்ல கூறுதல்
திங்களை நாய்குரைத்து அற்று.
அன்புடன்
நஞ்சில் ஏ பீற்றர்.
சென்னையில் முதல்வர் கருணாநிதி கலந்து கொண்ட சிவாஜி பட வெள்ளிவிழாவின்போது ஆபாசமாக உடை அணிந்து வந்த நடிகை ஷ்ரியா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை காவல் நிலையத்தில் இந்து மக்கள் கட்சி சார்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
Link: http://thatstamil.oneindia.in/movies/heroines/2008/01/complaint-on-shriya-for-obscene-dress-140108.html
I think it was not all that revealing and it was not a bad dress at all. Where to draw the line? and who has teh authority to draw that line? May be ramadoss should come up with a dress code and measurements saying this is how much girls can reveal.
I humbly disagree that this hurts the culture etc.,
I also have to disagree with teh comment that read "this stage was not for a show-off" - OFCOURSE it was for a show off and nothing more to it.
தமிழ் கலாச்சாரத்தை மதிக்கிறேன்: ஸ்ரேயா மன்னிப்பு!
''நான் இந்திய, தமிழ் கலாச்சாரத்தை மதிக்கிறேன். எனது உடையால் யாராவது மனம் புண்பட்டிருந்தால் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்'' என்று ஸ்ரேயா கூறியுள்ளார.
Link: http://tamil.webdunia.com/entertainment/film/featuresorarticles/0801/16/1080116026_1.htm
Post a Comment