அமெரிக்காவில் சிவாஜி
"சும்மா கிடந்தவனைச் சொரிஞ்சிவிட்டு
சூப்பர் ஸ்டார் ஆக்கிப்புட்டீங்க"
சிவாஜி பட வசனமிது
சிந்திக்கும் தருனமிது
படம் வெளியான இரண்டாவது நாள்
பார்த்தே தீரவேண்டும் என்ற படபடப்பு
பகல் பன்னிரெண்டு மணிக்குப் படம்
பத்து மணிக்கே பலருடன் நானும் ஆஜர்
இணையத்தில் ஏற்கனவே டிக்கெட் வாங்கியிருந்தாலும்
இல்லையென்று சொல்லிவிடுவார்களோ என்ற அச்சம்
இருக்கை பின்னுக்கோ முன்னுக்கோ
இருக்கையே இல்லாமலும் போய்விடுமோ
காத்திருந்து கால் வலி எடுக்கும் நேரம்
கதவுகள் திறந்திட்டார் காவலர்
கவுண்டரில் கிரடிட் கார்டைக் காட்டி
கையில் பெற்றனர் காட்சிக்கு டிக்கெட்
அடுத்த கேட்டில் கூடியது கூட்டம்
அடுத்த கணமே திறந்தனர் கேட்டை
ஆண்களை மிஞ்சியது பெண்களின் தள்ளுமுள்ளு
அழுது துடித்தனர் அவர்களின் பிள்ளைகள்
தொடங்கினர் படத்தை
தொட்டதுக்கெல்லாம் விசில் அடித்தது
தொண்டரடிப்பொடி கூட்டம் ஒன்று
எழுத்துக்கு விசில்; எழுந்து நின்றாலும் விசில்
அமெரிக்காவிலும் அதே கொடுமையடா சாமி!
ஆர்வமாய்ப் படம் பார்க்கும் வேளையிலே
அடிக்கடி தோன்றி மறைந்தான் 'அந்நியன்' திரையிலே
அடுத்த சீட்டில் அமர்ந்திருந்தவர் சொன்னார்
அத்தனையும் ஏற்கனவே சொல்லியதுதான் என்று
தமிழ்நாட்டுக்காக வாழ்கிறாராம்
தலைவர் சொன்னார் திரையிலே
தமிழ்ப் பண்பாட்டோடு பெண் கேட்டார்-ஆனால்
தண்ணீரிலும் கச்சைத்துணியிலும் அவளைக் காட்டி மகிழ்ந்தார்
பாடாதி படத்துக்குப்
பழைய பாடல் காட்சிகள் பக்கபலம்
புதியது என்று சொல்ல ஏதுமில்லா
புளிச்சுப்போன பழைய பண்டம்
அம்மா சொன்னார்; அய்யா சொன்னார்
ஆந்திராவின் சந்திரபாபு நாயுடும் சொன்னார்
நல்ல படம் இதுவென்று
நா கூசாமல் பொய் சொன்னார்
கருப்புப் பணத்தைக் கண்டுபிடிக்கும்
வெள்ளைத் தமிழனாக திரையில் ரஜினி
வெள்ளை மாளிகை அதிபரைப் போல
வெளிப்படையாய் வரவு செலவு காட்டினால் நன்று
இமயமலை ரஜினி இயக்குநர் ஷங்கர்
ஏவிஎம் சரவணன் ஏஆர் ரஹ்மான்
பெரிய ஆட்களின் பெயரைமட்டும் தாங்கிய
பெரிதாய் ஏதுமில்லா பெரும்பட்ஜெட் படம்
இஷ்ட்டத்துக்கு நிர்ணயிக்கப்பட்ட டிக்கெட் விலை
ஏனென்று கேட்க ஒரு நாதியில்லை
ஏகமாய்க் கொடுக்கப்பட்ட பில்டப்பால்
ஏமாற்றப்பட்டது ஏதோ தமிழினமே
பாழாய்ப்போன இந்த சினிமா பைத்தியங்கள்
படத்தை படமாக மட்டும்தான் பார்க்கவேண்டும்
படக்குழுவின் பில்டப்பில் சிக்காமல் இருக்கவேண்டும்
பணம் பறிக்கத் தெரிந்த பாவிகளிடமிருந்தும் தப்பவேண்டும்!
10 comments:
நலமா? உங்களையும் இதில் இணைத்துள்ளேன்...
http://halwacity.com/blogs/?p=263
சிரமம் கொடுத்திருந்தால் மன்னிக்கவும்.
ஏங்க.. உங்களுக்கே இது நல்லா இருக்கா.... இதுக்கு போய் அருமையான சிவாஜி படத்தை போட்டு இருக்கீங்களே?
தெரிஞ்சே ஏங்க போய் பார்த்தீங்க... என்னது.. தெரிஞ்சிக்கிறதுக்காதான் பார்த்தீங்களா...? அது சரி...!!
ஆமா, இம்பூட்டு தெரிஞ்சிருந்தும் ஏன் சார் அந்தப் பக்கம் போனீங்க. நல்லவேளை என்னோட $16 தப்பிச்சுடுச்சு :-))
ஆடு மாடு கோழிக்கு கூட
ஆளுக்கு ரெண்டு BLOG இருக்கு
அத்தனை கோடிக்கும் மத்தியில்
அடியேனின் BLOG-ஐ பார்வையிட வந்த//
இது செமையான நகைச்சுவை... :-))ஆமா, உங்களுக்கு புதுகைதான சொந்த ஊர்.
நமக்கும் அங்கிட்டு கிடக்கிற ஒரு கிராமம்தான் ஊரு... நல்வரவு.
தெகா,
உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி. ஆலங்குடி அருகில் உள்ள மெக்கேல்பட்டி தான் எனது கிராமம்.
நம்மூரு வந்து உங்க ஊரைத் தாண்டி தாங்க, கரம்பக்குடி :-)
போயிருக்றீர்களா அந்தப் பக்கம். இப்ப வாஷிங்டன் டி.சி தானா? நான் அட்லாண்டாவில் இருக்கேன்.
நல்ல விமர்சன கவிதை
அடடா? நல்லா விமர்சித்து எழுதியுள்ளீர்கள்.
நம் மக்கள் திருந்துமாப் போல் இல்லை
Dear John/Subbu:
That was a good piece of poetry. In fact, the so-called punch doalog of the movie -- "Singam single-aath thaan varum, panninga thaan koottamaa varum" itself has already been used in an earlier movie. I think Arjun was the hero in the movie. Probably, the director of the movie was Sankar.
The movie "Boys" too one seen flicked from the film Malèna.
Anyway...
Best wishes
Vivek, IIT Bombay
மனிதன் என்னும் பூமியிலே மாண்புமிகு மனிதனடா
மாண்புமிகு மனிதனுக்கு
மாண்புமிகு மனிதனடா
Post a Comment