Friday, July 20, 2007

சிரிப்பு


குறிப்பு: இந்தக் கவிதை வார்ப்பு மற்றும் தமிழோவியம் இதழ்களில் பிரசுரமாகியது

அடிமனதின் அழுத்தத்தை
அறவே அகற்றிடும்
அமிர்தாஞ்சன்

நெஞ்ச பாரத்தைக்
கொஞ்சம் குறைத்திடும்
வலி நிவாரணி

பதற்றத்தையும்
படபடப்பையும் போக்கிடும்
புகை போக்கி

சிந்தனைக் குதிரைகளை
சீரிப் பாயச் செய்திடும்
ஸ்காட்ச் விஸ்கி

அக்னி வெயிலின்
உக்கிரத்தைக் குறைத்திடும்
தர்பூசணி

சூறாவளிக் காற்றில்
சுழன்றிடும் வாழையைத் தாங்கும்
சவுக்கு மரம்

அழுபவனையும்
ஆனந்தத்தில் மூழ்கடிக்கும்
அன்னை மடி

சோர்வுற்ற வீரனையும்
வீறுகொண்டெழச் செய்யும்
துப்பாக்கிக் குண்டு

நீயும் சிரித்துப்பார்
சிறகடித்துப் பறந்துபார்!

5 comments:

Anonymous said...

சார் சுட்டா பொட்டுன்னு போய்டுவானே. அப்புறம் எப்படீங்க வீறு வர்றது?

Geetha Sambasivam said...

கமென்டுக்குப் பதிலே கொடுக்கலியே? :( வேலை அதிகமோ?

Agathiyan John Benedict said...

கீதா,
நீங்கள் FeTNA comment பற்றி குறிப்பிடுகிறீர்கள் என நினைக்கிறேன். மன்னிக்கவும். உங்களின் பாராட்டுதலுக்கு நன்றி. 'தாரா' எழுதியிருந்ததை நானும் படித்தேன். நிகழ்ச்சிகளைப்பற்றி விரிவாக எழுதியிருந்தார்கள். வேறு சிலரும் கூட அப்படியே எழுதியிருக்கக்கூடும். அதனால் தான் நிகழ்ச்சிகளைப்பற்றியே மீண்டும் எழுதாமல், சற்று வேறுபட்டக் கோணத்தில் எழுதியிருந்தேன்.

Anonymous said...

I like the Yenstin & Clintion picture and your kavithai on humor

arokiastephenraj said...

hai anna
i went through your kavithai. i am so happy to read your kavithai.by your experience you may have written it. but but i am not agree with first 3 sentence. your writting ways are good