முகூர்த்தக் கால்
குறிப்பு: இந்த எனது கவிதை பிரிட்டனிலிருந்து வெளிவரும் நிலாச்சாரல், கீற்று, அதிகாலை மற்றும் தமிழோவியம் இதழ்களில் பிரசுரமாகியது.
வயதில் மூத்தவர்கள் திரண்டு வந்து
வாயார வாழ்த்துவதுண்டு
வாழ்க்கையைத் தொடங்கும் இவர்கள்
வாழட்டும் பல்லாண்டு என்று
வசதி இருந்திட்டால்
வான வேடிக்கை உண்டு
வண்ண வண்ண விளக்குகளுண்டு
வளைவு அலங்காரங்களும் உண்டு
மூன்று வேளைக்கே முடியாதவனும்
மூன்று முடிச்சு போடுவதுண்டு
முகப்பிலே பந்தல் போட
முகூர்த்தக் கால் ஊன்றுவதுண்டு
உள்ளூரைத் திரட்டி வந்து
ஒரு சேர கூடி நின்று
மஞ்சளும் சந்தனமும்
மரத்துக்குப் பூசுவதுண்டு
மணமணக்கும் குங்குமத்தை
மல்லிகைப் பூ அணிந்த
மங்கையர்கள் தொட்டு வைத்து
மரத்தை வணங்கி மகிழ்வதுண்டு
மணிக்கணக்கில் மரத்துக்கு மரியாதை
மயங்கும் பசியில்
மாப்பிள்ளையின் தங்கை மகன்
காலை வெயிலில் களைப்புற்று
கடைசியில் கேட்டான் கேள்வியொன்று
அம்மா...
கல்யாணம் மாமாவுக்கா?
இல்லை இந்த மரத்துக்கா?
13 comments:
எளிமையான கவிதை.
நிறைய இப்படி எழுத வாழ்த்துக்கள்,
நண்பரே!
Congrats john. wish you many more successes in life.
Suresh KS
VaNakkam John
I really enjoyed your Kavithai. The last two lines are excellent!
Please write more like this. I appreciate all your real Tamil efforts.
Mikka Nandri
I congrtulate you for your poems which is fetching international attention. Best wishes for your innovotive poems with great themes. It is very hard to live in USA and imagine the themes of India, I sincerely think that your soul has a yearning for Tamil though you are here in USA.
This is an unique and fantastic journey that you are enriching the literary traditions of Tamil writing in USA. Your poetic abilities are briliant and keep this torch lighted and alive for ever. Your collections of the poems will bring laurels to you one day as a great poet and that day is not far. Keep it up and my most appreciative wishes.
congrats on the poems being published; its awesome
அருமையான வரிகள்... பொதுவாகவே அநேகமான கல்யாணச் சடங்குகளில் வேதியர்களின்
மந்திரங்களும் புகையும், கிரியை முறைகளும்...சமயத்தில் கொட்டாவி
வந்துவிடும்...பெரியவர்களுக்கே அப்படியென்றால் குழந்தைகள் என்ன செய்யும்
பாவங்கள்.அநேகமான குழந்தைகள் தங்கள் பாட்டுக்கு ஓடி விளையாடினால் கூட இந்தப்
பெரியவர்களுக்கு காணப் பொறுக்காது. அவர்களை வலுக்கட்டாயமாக இருக்கையில்
உட்கார்த்திவிடுவார்கள்..
அந்தப் பையன் கேட்டது நியாயமான கேள்வி...தான்.!
Kavithai romba nalla irrunthathu. Ungal thiramai mellum mellum valara vazhthugal.
Congradulations. This is great! You are so humble and very very talented. I
guess you are a "Nira Kudam" (full pot).
நீங்கள் சாடுவது யாரை என்று புரியவில்லை.
திருமணச் சடங்குகளையா?
திருமணத்தையா?
இல்லை மாப்பிள்ளையின் தங்கை மகனையா?!. - குழந்தைகள் இப்படிக்
குழந்தைத்தனமாகத்தானே கேள்விகள் கேட்கும் !..
ஆனால் திருமண நிகழ்வை அப்படியே கண் முன் கண்டேன் உங்கள் கவிவரிகளில்!....ஜான்
சார்..
Hello American Popayaa,
Thoroughly enjoyed your poem in
Nilacharaal.Kalyanathukkae pOi vanthal pol irunthathu.
Read you Blog page as well. well done.
I read your poems and they are really good and enjoyed reading it. I did not know that you are this good. Keep it up (D.C Salomon Papaiyya)
Dear Benedict,
I am happy to read Muhoorthakkaal!
Great! Keep writing every now and then. Vaazhtukkal....
ரொம்ப நல்ல இருக்கு
அன்புடன் இச்டிபன்
Post a Comment