Thursday, September 13, 2007

கொள்கை

கொள்கை என்பது...
கொண்டையில் பூவல்ல
கோதிவிடும் முடியல்ல
குருதியில் கொழுப்பல்ல
தொப்புள் கொடியல்ல
தோளில் துண்டல்ல
தலைவர்கள் கூறுவதுபோல்
இடுப்பில் வேஷ்டியல்ல
கோவணத் துணியுமல்ல
கொள்கை என்பது...
கோவணந் தாங்கி நிற்கும்
அறுந்து விழா அரைஞாண் கயிறு!

8 comments:

Anonymous said...

வெளிநாட்டுக் காரன் எவ்ளோ காசு கொடுத்தான் உன்னை மதம் மாற்ற?

அன்புடன்,
எழில்.

அருள் said...

"கோவணந் தாங்கி நிற்கும்
அறுந்து விழா அரைஞாண் கயிறு!"

thavaru thoza, jatti potta enna pannuveenga ? yetha solluveenga?

kolkai enpathu uyir.

Anonymous said...

கேலியுடன் கூடிய எதுகை மோனை உவமைகளில் கவனம் செலுத்திய தாங்கள் பொருளில் கோட்டை விட்டீர்களே. கொள்கை என்பது பொது. ஆண் பெண் அனைவருக்கும் சமம். ஆணாதிக்கம் அழிந்து வரும் காலத்தில் கொள்கை என்பது ஆணுக்கே என்பது போல உள்ளது உங்கள் சிந்தனை ... மேலும் வளர வாழ்த்துக்கள். - அன்புடன், செல்வம்

Agathiyan John Benedict said...

"கொள்கை எங்களது கோவணம்; அதை ஒருபோதும் இழக்கமாட்டோம்" என்று நம்ம தலைவர்கள் அவ்வப்போது அள்ளிவிடுவது ஞாபகம் வந்தது. அந்தக் கோவணத்தைத் தாங்குவதே அந்த அரைஞாண் கயிறுதானே என்ற ஞானோதயமும் உடன் எழுந்ததால், அதை ஒரு கிறுக்கு கிறுக்கினேன்.

Anonymous said...

> "கொள்கை எங்களது கோவணம்; அதை ஒருபோதும் இழக்கமாட்டோம்" என்று நம்ம
> தலைவர்கள் அவ்வப்போது அள்ளிவிடுவது ஞாபகம் வந்தது. அந்தக் கோவணத்தைத்
> தாங்குவதே அந்த அரைஞாண் கயிறுதானே என்ற ஞானோதயமும் உடன் எழுந்ததால், அதை
> ஒரு கிறுக்கு கிறுக்கினேன்.

அரைஞாண்தான் கொள்கை.
கொள்கைதான் எல்லாவற்றையும் தாங்க வேண்டும்.

நல்ல கருத்து

Agathiyan John Benedict said...

நண்பர் எழில் அவர்களே, அ... உ...ன்னா உடனே "பணம்" தானா? என்ன போங்க...
மதம் மாறுவதென்பது ஒரு தனி மனித செயல்பாடு. இங்கே போய் ஏன் முடிச்சுப் போடுறீய...-:)

Agathiyan John Benedict said...

நண்பர் செல்வம் அவர்களே, உங்க கூற்று உண்மைதான். கொள்கையின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காகத் தான் அரைஞாண் கயிற்றை உபயோகப்படுத்தினேனே தவிர, கொள்கை ஆண்களுக்கு மட்டுமானது என்பதற்காக அல்ல. மேலும் வளர வாழ்த்தியமைக்கு நன்றி.

Agathiyan John Benedict said...

அருள் அய்யா அவர்களே, கொள்கை என்பது உயிர் என்பது சரியே. நாமெல்லாம் கவரிமான் பரம்பரையில்லையா...??? "கொள்கை" பற்றிய இந்தச் சிறுகவிதையில் குளப்படி வந்துவிடக்கூடாது என்ற "கொள்கை"யினால் தான், ஜட்டி போடுவோர், பாவாடை கட்டுவோரைப்பற்றியெல்லாம் சிந்திக்காமல், அரைஞாண் கயிற்றின் மூலமாக மட்டுமே "கொள்கை"யை விளக்கியிருக்கிறேன் -:)