Sunday, September 16, 2007

சங்கு

தெருக்களிலும்
தேநீர்க் கடைகளிலும்
உட்கார நேரமின்றி
ஊர் சுற்றியலையும்
ஜாதியெனும்
வெறி நாயை
இணையம் வரை
இழுத்துவந்து
வலைப்பதிவு
வாசகர்மேல் ஏவிவிட்ட
ஜாதி மத வலையர்களுக்கு
சங்கூதுவோம் வாரீர்!

4 comments:

Anonymous said...

ஜாதி மத வலையர்களுக்கு
சங்கூதுவோம் வாரீர்
<>
நல்ல நோக்கம்!

-சுரேஷ்பாபு

Ravikumar Veerasamy said...

"சங்கே முழங்கு"
நல்லா சத்தமா முழங்குவோம்
என்றே அனைவறையும் அழைப்போம் ...

Agathiyan John Benedict said...

நன்றி திரு. சுரேஷ் பாபு மற்றும் ரவிக்குமார் அவர்களே.
"பேய் பேய் என்று பயந்து ஓடி ஒழிந்தால் அங்கே ரெண்டு பேய் அவுத்துப் போட்டு ஆடிச்சாம்". அந்தக் கதையா, நல்ல இயல்புத் தமிழ் வாசிக்கலாம்னு இணையத்துல வந்து ஒதுங்கினா, இங்கேயும் இந்தப் பாழாப்போன ஜாதிச் சண்டை... எங்கே போய் முட்டுறதுன்னு தெரியலை -:)

Anonymous said...

கவிதைகள் மிக அருமை ஜான்!
சங்கு கவிைத நச்!!

நட்புடன்
நம்பிக்கைபாண்டியன்
http://npandian.blogspot.com/