Sunday, September 23, 2007

பாடும் போது...

பப்ளிக்ல பாடுவது
பாரின்ல நியூசென்சு
பக்குவமா பாடிப்புட்டா
பலரை மயக்க இது லைசென்சு

வாய்விட்டு நான் பாடும்போது
வாசிங்டனே வணக்கம் சொல்லும்
இறுக்கமான சூழ்நிலையும்
இமைப் பொழுதில் இளகுவாகும்

தனிமையில தவிக்கையில
தலைமுடியை வருடிவிட்டு
தாவி வந்தென்னை அணைச்சுக்கும்
தாளமில்லா எம் பாட்டு

பாடிக்கொண்டு நடக்கும் போது
பாரம் கொஞ்சம் குறையுது
பார்ப்பவர்கள் முகங்களெல்லாம்
பள பளப்பாய் ஒளிருது

இசை கேட்கும் திசை நோக்கி
ஓசையின்றி பலர் புன்முறுவ
உள் மனதின் வேதனையோ
ஓடி எங்கோ ஒழியுது

வேலை நேரத்திலும் பாடுவேன்
வேண்டாதவரிடத்திலும் பாடுவேன்
வேகமாய் நடக்கும்போது
விறுவிறுப்பாய் நானும் பாடுவேன்

கதவு மூடிய லிப்ட்டில்
கனவுப் பாட்டு நான் பாடுகையில்
காரியதரிசி கேட்டாள்
Are you happy, J?
கண் திறந் துரைத்தேன்
Singing makes me happy!

2 comments:

Anonymous said...

Also singing is a good companion when walking alone at night.

Your poem is more about "your life" -:)

Agathiyan John Benedict said...

உண்மைதான் அனானியாரே. இது ஒன்றும் பெரிய கவிதையல்ல. நான் எப்போதுமே பாடிக்கொண்டே இருப்பதுண்டு. அதைத்தான் இப்படி கவிதைச் சாயலில் எழுதியுள்ளேன். அவ்வளவுதான்.