Thursday, September 27, 2007

ஜீவஜோதி



எண்ண முடியா விண்மீன்களும்
எரிந்து என்றோ விழுகிறதே
விடியும் காலைப் பொழுதினிலே
விரல்விட் டெண்ணவும் முடிகிறதே


அள்ள அள்ளக் குறையாத
ஆற்று மணலும் அத்துப்போச்சே
மெரினா பீச் மணற் குப்பையும்
மெஷினால் சலித்து சுத்தமாச்சே


நீலவானை மூடி நிற்கும்
நிறங்கருமை மேகம் பெய்ய
நிலமகள் உள் வாங்கிய
நிலத்தடி நீரும்கூட வற்றிப்போச்சே


பீதியூட்டும் ஜாதி மதங்கள் மட்டும்
ஜோதியாய் சுடர்விட் டெரிகிறதே
ஊதியணைக்க முடியாமல்
ஊரெல்லாம் பற்றி எரிகிறதே

2 comments:

Anonymous said...

//நீலவானை மூடி நிற்கும்
நிறங்கருமை மேகம் பெய்ய
நிலமகள் உள் வாங்கிய
நிலத்தடி நீரும்கூட வற்றிப்போச்சே//

Good wording...

Anonymous said...

அன்புள்ள நண்பரே,
வணக்கம். பாட்டிலும் குறைவில்லை. கருத்திலும் பிழையில்லை. ஊதி அணைக்க முயலவில்லை. ஊதிவிட்டு வளர்க்கிறார்கள். சிந்தனையைத் தூண்டும் சிறந்த கவிதை எந்தனுள்ளும் எழும் நாள் எந்நாளோ

அன்புடன்
நந்திதா