Sunday, September 30, 2007

பெண்


உயிர்கள் தோன்றுவது பெண்ணாலே
உறவுகள் மலர்வது பெண்ணாலே
உள்ளம் மகிழ்வது பெண்ணாலே
உரிமைக்குரல் ஒலிப்பதும் பெண்ணாலே

பண்புகள் வளர்வது பெண்ணாலே
பாசம் பொங்குவது பெண்ணாலே
பசி மறைவது பெண்ணாலே
பாரினில் இன்பம் பெண்ணாலே

இல்லறம் அமைவது பெண்ணாலே
ஈருயிர் இணைவது பெண்ணாலே
இன்னல் மறைவது பெண்ணாலே
இலக்குகள் அடைவதும் பெண்ணாலே

குத்துவிளக்கு எரிவது பெண்ணாலே
குலமகள் சிரிப்பது பெண்ணாலே
குற்றங்கள் குறைவது பெண்ணாலே
சுற்றம் நிலைப்பதும் பெண்ணாலே

விருந்தோம்பல் நடப்பது பெண்ணாலே
வீரம் விளங்குவது பெண்ணாலே
வில்லங்கம் ஒழிவது பெண்ணாலே
வில்லன்கள் அழிவதும் பெண்ணாலே

அழகுக்கு அழகு பெண்ணாலே
அம்மாவுக்கு அர்த்தம் பெண்ணாலே
அன்பு ஊற்றெடுப்பது பெண்ணாலே
அண்டம் சுழல்வதும் பெண்ணாலே

ஐம்புலன் இயங்குவது பெண்ணாலே
ஆண்கள் வாழ்வது பெண்ணாலே
ஆற்றல் பெருகுவது பெண்ணாலே
வெற்றிகள் குவிவதும் பெண்ணாலே

எத்தனை எத்தனை
பெருமைகள் நல்ல பெண்ணாலே
எனக்கொரு பிறவி இனியிருந்தால்
பிறப்பேன் நானும் அவள் போலே!

10 comments:

Anonymous said...

> உயிர்கள் தோன்றுவது பெண்ணாலே
> உறவுகள் மலர்வது பெண்ணாலே
> உள்ளம் மகிழ்வது பெண்ணாலே

>>>>> நிஜமாவா சொல்றீங்க ....?!

உரிமைக்குரல் ஒலிப்பதும் பெண்ணாலே ???

:):):) நல்லாருக்கு பெனடிக்ட்.

அன்புடன்
சக பயணி
ரிஷி ரவீந்திரன்

Agathiyan John Benedict said...

பாராட்டுக்கு நன்றி.
ஆணுக்குப் பெண் சமம் என்ற "சம உரிமைக் குரல்" தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருப்பது பெண்களால் தானே...-:)

Anonymous said...

அன்பு ஜான்,
கவிதை வரிகள் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் சில கருந்துக்களை ஒப்புக்கொள்ள முடியவில்லை.

Anonymous said...

அன்பு ஜாண்,

பெண்மை வாழ்க!
பெண்மைக்கு முழுமை, மங்களம் தருவது ஆண்மை. இருவரும் இணைந்த இல்லறத்தில் ஒருமித்து வெற்றி சிறப்பதுவே ஏற்புடையது.

பாராட்டுக்குறிய கவிதை.

- சூர்யா
வாழ்க தமிழ்! வெல்க தமிழர் சேனை!

Ravikumar Veerasamy said...

பெண்ணின் பெருமையை பட்டியலிட்டு பாராட்டும் தங்களின் பகுத்தறிவு கவிதை பிரமாதம், அடுத்த பிறவியில் பெண்ணாக பிறக்க ஆசைப்படும் தங்களின் விருப்பம் பாராட்டுக்குறியதே!

Anonymous said...

எத்தனை எத்தனை
பெருமைகள்* நல்ல* பெண்ணாலே

அப்பப்பா! கவிதையிட்டவுடன் அம்பென எத்தனை மடல்கள். நிற்க - கவனிக்க - அவர் *நல்ல
பெண்ணாலே* என்று தானே கூறியிருக்கிறார். வாதங்கள்?????விவாதங்கள்?????????

Anonymous said...

ஓ.. நீங்க அப்படி வர்றீங்களா? சரி சரி...
நல்ல பெண். ஆமோதிக்கிறேன்.

Anonymous said...

அன்பு ஜான்,
மிக அழகான கவிதை. ஆனால் மஞ்சூர் ராஜா சொன்னதை நானும் ஆதரிக்கிறேன்

குற்றங்கள் குறைவது,,,,,,,,,
சுற்றம் நிலைப்பதும் ,,,,,,,

அன்புடன் விசாலம்

Anonymous said...

அருமையா சொல்லி இருக்கீங்களே..அடேங்கப்பா!!

பெண்மையை உணர்ந்திருக்கீங்க!! (தாய்க்குலத்தின் ஏகோபித்த ஆதரவையும் பெற்றுவிட்டீர்கள்) ;))

வாழ்க! வாழ்க!!
பிடித்த வரிகள் எல்லாம் 'மஞ்சள் பூசி வைச்சிருக்கேன்.."பெண்" ணுக்கு மஞ்சள் பூசினா மங்களகரமா இருக்கும் அல்லவா? :)))

என்றென்றும்
சுதனின் விஜி

Arun said...

"ஐம்புலன் இயங்குவது பெண்ணாலே"


True...bad cooks tend to do that.