Tuesday, October 2, 2007

காந்தி கணக்கு


காற்றில் கரைந்துவிட்ட
காந்தீயத் தத்துவங்களைக்
கழித்துப் பார்த்தபின்
காந்தி சிலையின் மிச்சம்
காகங்கள் இட்ட எச்சம்!


நினைவுக்கு: இன்று அக்டோபர் 2 - காந்தி ஜெயந்தி

4 comments:

Anonymous said...

அன்பு, அமைதி வழி, சாத்வீக கொள்கைகள் இன்றும் வாழ்கின்றன. வெற்றியும் பெறும்
இறுதியில்.

இந்த புதிய நூற்றாண்டில் பாருஙகள், ஆயுதங்கள் அமைதியை வாங்க இயலாது என்பதைத்தான் எடுத்துரைக்கின்றன.

காந்தீய தத்துவங்கள் அழியவும் இல்லலை, கழியவுமில்லை. மனிதர்கள் கையில்தான் அது
பாடாய்படுகிறது.

அவலத்தை அழகாக சொல்லியிருக்கிறீகள், ஜான்.

- சூர்யா
வாழ்க தமிழ்! வெல்க தமிழர் சேனை!

Anonymous said...

நல்ல கவிதை ஜான்!
இது நல்லார் குடி இருந்த நாடு...அன்புடைய நெஞ்சங்கள் அமைதிவழி செல்பவர்கள்
அஹிம்சாவாதிகள் இருக்கிறார்கள் இன்னமும்...சூர்யா சொல்வது உண்மை.

கதராடை காந்தி கனிவுமிகு நேரு
மிதவாதி கோகலே இன்னும்- சுதந்திரப்
பள்ளுதனைப் பாடிய பாரதி என்றுபல
நல்லார் குடியிருந்த நாடு!

சந்தடில வெண்பா சிந்து!!

Anonymous said...

ஆண்டவன் ஒரு நாள் கடைவிரித்தான் அதில்
ஆயிரமாயிரம் பொருள் குவித்தான்
அவரவர் நிலைமைக்கு விலையைச் சொன்னான்
அவரவர் தேவைக்கு வாங்கச் சொன்னான்

பெண்களோ அழகை வாங்க வந்தார்
ஆண்களோ ஆசையை வாங்க வந்தார்
கவிஞர்கள் புகழை வாங்கிச் சென்றார்
புலவர்கள் பொய்களை வாங்கிச்சென்றார் (ஆண்டவன்)

குருடர்கள் பார்த்திட விழி கேட்டார்
ஊமைகள் பேசிட மொழி கேட்டார்
உறவினர் மாண்டவர் உயிர் கேட்டார்
ஒரு சிலர் வேலுக்கு விலை கேட்டார்

எதையும் வாங்கிட மனிதர் வந்தார் விலை
என்னவென்றாலும் அவர் தந்தார்
இதயம் என்பதை விலையாய்த் தந்து
அன்பை வாங்கிட எவருமில்லை

LakshmanaRaja said...

நல்ல வார்தைகள் நண்பரே..