வேற்றுமையில் ஒற்றுமை
எனக்கிணையாய் நீயும்
உனக்கிணையாய் நானும்
இணைக்கிணையாய்
இணையாமல் நடக்கையிலே...
உன் நிழலும்
என் நிழலும்
இணைந்து
ஒன்றன் மீதொன்றாய் விழுந்து
ஒட்டி உறவாடுது பார்
எதிரும் புதிருமாய்
எதிரெதிர்த் திசையில் நாம்
திசைமாறி நடந்தாலும்...
இருவரின் நிழலும்
ஒற்றுமையாய்
ஒரே திசையில்
விழுகுது பார்
வேற்றுமையில்
ஒற்றுமை காண
விழும் நிழலே போதும் வா
வேறோர் விளக்கம் வேண்டாம் வா
9 comments:
எனக்கிணையாய் நீயும்
உனக்கிணையாய் நானும்
இணைக்கிணையாய்
இணையாமல் நடக்கையிலே...
நல்லா இருக்குங்க! நண்பா
நட்புடன்
நம்பிக்கைபாண்டியன்
http://npandian.blogspot.com/
நாலே வரின்னாலும் சும்மா "நச்"சுன்னு இருக்கு!!!
சரிதாங்க ஜான்
ஆனால் இதை உணர ஒரு விளக்காவது வேண்டுமே
வேந்தன் அரசு
நிஜம்ம்மா?
> > எதிரும் புதிருமாய்
> > எதிரெதிர்த் திசையில் நாம்
> > திசைமாறி நடந்தாலும்...
> > நம் இருவரின் நிழலும்
> > ஒற்றுமையாய்
> > ஒரே திசையில்
> > விழுகுது பார்<<<
அடடா!!....
> > வேற்றுமையில்
> > ஒற்றுமை காண
> > விழும் நிழலே போதும் வா
> > வேறோர் விளக்கம் வேண்டாம் வா<<
வேற்றுமையில் ஒற்றுமை கண்டால்..வாழ்க்கை சொர்க்கம் தான். :)
என்றென்றும்
சுதனின்விஜி
"நாமார்க்கும் குடியல்லோம்"
நமனை அஞ்சோம்"
இணையாமல், எதிர்த்திசையில்
திசை மாறி நடப்பவரின் மனநிலையைப் புரிந்து கொள்ளாமல், அவரை வாவென
அழைப்பது சரியில்லை என நினைக்கிறேன்.
பெண்மையைப் போற்றி மதிப்போம்!
பின்னூட்டமிட்ட தோழர்களுக்கு மிக்க நன்றி.
டாக்டர் சங்கர் அவர்களே,
ஆண், பெண் என்று நான் குறிப்பிடவேயில்லை. இருவருக்கும் வேற்றுமைகள் இருக்கிறதென பொதுவாகத்தான் சொல்லியிருக்கிறேனே தவிர, ஆண்மையைப் பற்றியோ, பெண்மையைப் பற்றியோ குறையாக ஏதும் சொல்லவில்லை. அப்படியிருக்க "பெண்மையைப் போற்றி மதிப்போம்" என்று தாங்கள் எழுதிடவேண்டியதன் தேவையை விரும்பினால் விளக்க முடியுமா? நன்றி.
எழுதியவர் ஜான்! அவர் ஆணென்னும் நிலையில் இருந்து எழுதியதாக நான் கருதினேன்!
சரியாகச் சொல்லாதது என் பிழையல்ல! :))
Sincerely,
Sankarkumar
எழுதப்பட்டிருப்பதைத் தான் பார்க்கவேண்டுமே தவிர எழுதியவரைப் பார்ப்பது
சரியல்ல என்பது எமது கருத்து.
very like
Post a Comment