Sunday, October 21, 2007

கம்ப்யூட்டர் வேலை


இக்கவிதையின் ஒலி (ஆடியோ) வடிவம் இதோ:
Get this widget | Track details | eSnips Social DNA
கம்ப்யூட்டரைப் பாத்து பாத்து
கண்ணு ரெண்டும் பூத்துப் போச்சு
கணிணித் திரையை நோக்கி நோக்கி
கழுத்து வலி எடுத்துப் போச்சு

மெளஸ் பிடிச்சு மெளஸ் பிடிச்சு
மணிக்கட்டு தேஞ்சு போச்சு
மணிக்கணக்காய் அமர்ந்திருந்து
காலு ரெண்டும் மரத்துப் போச்சு

இருக்கையிலே இருந்து இருந்து
இடுப்பு வலி எடுத்துப் போச்சு
இயங்காத உடம்புக்குள்ளே
இரத்த ஓட்டம் நின்னு போச்சு

கதவுகளை மூடிக்கொண்டு
காற்று நுழையா ரூமுக்குள்ளே
பகல் முழுக்க வேலையால்
பகல் சூரியனைப் பார்க்கமுடியாமப் போச்சு

வாட்டும் கோடையில் ஏசிக் காற்று
வதக்கும் குளிரில் வெப்பக்காற்று
இயற்கை கூட யாருமிங்கே
இணைந்து வாழ முடியாமப் போச்சு

தடவித் தடவி யோசிச்சு
தலைமுடியெல்லாம் கொட்டிப் போச்சு
தவறுகளைத் திருத்தி திருத்தி
தலைவலி தான் கூடிப் போச்சு

உடற்பயிற்சி ஏதுமின்றி
உயிரணுக்கள் செத்துப் போச்சு
முழுநேரச் சிந்தனையால்
மூளையெல்லாம் வறண்டு போச்சு

விசைப்பலகை தட்டித் தட்டி
விரல்கள் எல்லாம் விரச்சுப் போச்சு
வளைச்சு வளைச்சு கோடு எழுதி
வாலிபம் இங்கே முடிஞ்சு போச்சு

நகராத உடல் உறுப்பில்
நாளங்கள் நீர்த்துப் போச்சு
இயந்திரத்தோடு வாழ்ந்து வாழ்ந்து
இல்லறம் இன்னலாப் போச்சு

காலமெல்லாம் கற்றால் தான்
கணிணியுலகில் வேலை என்றாச்சு
ஓயாமல் உழைச்சு உழைச்சு
உண்ணும் நேரம் தவறிப் போச்சு
உறக்கமதும் தொலைஞ்சு போச்சு

மெஷினோடு பேசிப் பேசி
மனுஷங்களை மறந்து போச்சு
மணிக்கணக்கா யோசிச்சு
மன நோய் நெருங்கிடுச்சு

வாழ்க்கையே இதுதான் என்றால்
வாழ்வின் அர்த்தம் நீர்த்துப் போச்சு
வசதிகள் பல இருந்தும்
வாழாவெட்டி ஆகிப் போச்சு

உயிர் மூச்சு பிரியும்போது-கணிணியையும்
உடலுடன் அடக்கம் செய்ய
உத்தரவு ஒன்னு போடச் சொல்லி
உள்துறை மந்திரிக்கு
உயிருடனே இ-மெயில் அனுப்பியாச்சு

28 comments:

கொழந்தவேல் இராமசாமி said...

VOW!!
கண்ண்தாசன் தோற்றார் போங்க ஜான்!

நல்ல சந்தத்தோடு, தமிழ் வார்த்தைகளை அள்ளி வீசி இருக்கிறீர்கள்!!

தொடர்ந்து நல்ல படைப்புக்களைக் கொடுங்கள்!

வாழ்த்துக்கள்,
கொழந்த்வேல் இராம்சாமி
மேரிலாந்து, USA.

கொழந்தவேல் இராமசாமி said...

சுவையான நல்ல கவிதை! மிகவும் ரசித்தேன், தமிழ் நயத்தை! தம்பி ஜான் அவர்களின் கவித்திரத்தை!!!

வாழ்க! வாழ்க, வாழ்க!!

naanjil said...

அருமைத்தம்பி பெனடிக்ட்
நல்ல தரமான கவிதைப் ப்டைத்திருக்கிறீர்கள். நன்றி.
அன்றாட வாழ்க்கை பிரச்சனையைத் தெளிவாக புரியும் தமிழில் சுவையாகத் தந்திருக்கிறீர்கள்.
உங்கள் தமிழ்ச்சேவை மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.
அன்புடன்
நாஞ்சில் எ. பீற்றர்
www.thirukkural2005.org

Anonymous said...

Reality speaks in your poem on "Computer Vellai". Very nice one.

BP said...

Very Nice.
பகல் சூரியனைப் பார்க்கமுடியாமப் போச்சு - This line is so touching.

Agathiyan John Benedict said...

அண்ணன் கொழந்தவேல் அவர்களே,

உங்களின் பாராட்டுதலுக்கு மனமார்ந்த நன்றி. கண்ணதாசனையே என் கவிதை தோற்கடித்துவிட்டதாக சிறந்த தமிழ் இலக்கிய வித்தகராகிய நீங்கள் கூறியது எனக்கு புது உத்வேகத்தைக் கொடுக்கிறது. ஆனால், கண்ணதாசனின் காலடி மண்ணைத் தொடக்கூட எனக்குத் தகுதியில்லை என்பதே உண்மை.

Anonymous said...

The style of writing in this poem is so nice.
Regards,
BP

Anonymous said...

Dear Mr. John Benedict;

I read your poem on computer occupation this morning. Perhaps, this is the first masterpiece of your creation. It is reflective of the feelings of millions of people around the world, and you expressed it in a candid form.

I have a doubt. Is it kanini or kanani. As always wish you the best.
Selvin Kumar

Anonymous said...

Good one .. ama y u sent email to Home Ministry instead of IT Minister :-)

Best Regards
Benno (Australia)

Agathiyan John Benedict said...

Thank you, Dr. Selvin Kumar.
You are the "Scholar", but I am not. With the very little I know, it is "Kanini". Sir, please correct me if I am wrong. Your guidance will definitely help me to avert mistakes. Thank you again.

Anonymous said...

Dear Mr. John Benedict,

Thanks for your kind words.

In fact, in the year circa 1983, when the Tamil scholar Va. Supa. Manickam was the Vice Chancellor of Madurai Kamaraj University, the Computer Dept was created. There was no accepted word in Tamil for computer in those days. So he kind of invented the term in Tamil and the sign said, Kanani Myyam. That is what prompted me to write it.

I am sure, it is Kanippaniyal for computer science. So I fully agree with you.

Again I pray the good Lord to bless you with great works like this. Trust me, the time you spent in making this poem is well invested, it is very outstanding.

With best wishes and love
Selvin Kumar

Unknown said...

Dear John Benedict,
Your poem is wonderful and I really enjoyed it.

Agathiyan John Benedict said...

மிக்க நன்றி பேராசிரியர் FFX அவர்களே.
எனது கல்லூரி ஆசிரியராகிய உங்களால் இந்த மாணவன் பாராட்டப்படுவது மட்டற்ற மன மகிழ்வைத் தருகிறது. உங்களின் ஆசிகள் என்னை மென்மேலும் வளரவைக்கும்.

Anonymous said...

விண் உயர்ந்த கட்டிட்டம் என்றால், விண்ணைத் தொடவில்லையே என்று யாரும் கேட்பது கிடையாது அல்லவா?

அது போலத்தான்....
கண்ணதாசன் வாடையை ஜான் கவிதையில் முகர்ந்தேன் என்பதே!

கவிஞர் அந்தோணிசாமி அசந்துவிடுவார்.....டி.சி-ல் உள்ளார்.

அவரை உங்களுக்குத் தெரியுமா?

நன்றியுடன்,
கொ.இராமசாமி
(கொழ்ந்தவேல் அப்பா பெயர்!)

Anonymous said...

நிகழ்காலத்தில் நடக்கும் உண்மை நிலையை அப்பட்டமாக வெளிச்சத்திற்கு கொண்டுவந்திருக்கிறீர்கள். ஒரு சில ஆங்கில வார்த்தைகளை தவிர்த்திருக்கலாம்.

Anonymous said...

Hi john
I enjoyed your computer kavithai wonderful. keep up your spirit. thanks for sharing it with us.

jeritta

Anonymous said...

//வசதிகள் பல இருந்தும்
வாழாவெட்டி ஆகிப் போச்சு //

விரக்தி உணர்வை உங்களுக்கே உரித்தான பாணியில் எடுப்பாக சொல்லியிருக்கிறீர்கள்.

நல்ல தெளிவான கவிதை தந்து இருக்கிறீர்கள் ஜான்.

அன்புடன்
சூர்யா
http://www.manoharggs.blogspot.com
http://manoharggs.wordpress.com

Anonymous said...

மெஷினோடு பேசிப் பேசி
மனுஷங்களை மறந்து போச்சு
மணிக்கணக்கா யோசிச்சு
மன நோய் நெருங்கிடுச்சு

வாழ்க்கையே இதுதான் என்றால்
வாழ்வின் அர்த்தம் நீர்த்துப் போச்சு
வசதிகள் பல இருந்தும்
வாழாவெட்டி ஆகிப் போச்சு

இவை இரண்டும் யோசிக்க வைக்குதுங்க ஜான்... நல்லா இருக்குதுங்க./.

நட்புடன்
ரமேஷ்
(வேணுமின்னே யோசிப்போர் சங்கம்)

Anonymous said...

பாராட்டுக்கள் ஜான்.. மிகவும் அருமையான, வாழ்க்கைக்கு தேவையான கவிதை !!

Anonymous said...

Kavithai megavumm arputham.

Nandri,
Muthuganesh Nagappan

Anonymous said...

Hi John,
Excellent Poem. Machine, code, mouse, computer, email IT-poem-il ithallam sagajam. Without these words it would be tough to get the flow. Awesome to read. Thanks for sharing.

--altrine.

Anonymous said...

ஜான் நான் ஒரு ரெண்டு ஏக்கர் நிலம் வச்சிருக்கேன்

வாங்க கலப்பை பிடிக்கலாம்

வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)

Anonymous said...

Hello John..
Fantastic!. You said everything but missed our 'Budget stress'...

Anonymous said...

Dear Benedict,

It is a spectacular poem; nicely portrayed hectic moments from the side of a computer bound employee. Keep it up.

Thobias Michael
Saudi Arabia

Anonymous said...

wow!!.. great John.

Agathiyan John Benedict said...

வேந்தன் அய்யா அவர்களே,

ஏர் உழவனின் சிரமங்களைத்தான் ஏற்கனவே பல கவிஞர்கள் தெளிவாக எழுதி வைத்துவிட்டார்களே. அட நானே ஏர்பிடித்து உழுதவன் தானே? அங்கே ஒருவித கஷ்டம் என்றால் கணிணியில் வேறுமாதிரியான கஷ்டம் என்று சொல்லியிருக்கிறேன். அவ்வளவுதான். நன்றி.

Anonymous said...

Dear John
computer kavithai mikach chirappu, i am also oddi konde ithai padikkiren. All r like that; intha ulakam mikavum viraindhu selkirathu; athil namum odda vendi ullathu; illavittal pinnal varubavan mutti vittu chendru viduvan; meendum elumbi odda , odda vendum nam valkaiyil. computer mattum alla, ellathaium fasta matriputtanga. athil cila vithi vilakkaka ullahtu like nam thamil mozhi, etc

Bai
stephen (Chennai)
Michaelpatty

சதங்கா (Sathanga) said...

ஜான்,

அருமையான கவிதை. நன்றாக சத்தத்தோடு வந்திருக்கிறது கணினி கவிதை.

எனது இரண்டு விமர்சனங்கள்:

1. பின்னூட்டத்தில் சொல்லியது போல் ஆங்கில வார்த்தைகளைத் தவிர்த்திருக்கலாம்.

2. சொல்ல வந்த விசயத்தை மிகத் தெளிவாகச் சொல்லியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் !