Sunday, November 4, 2007

புன்னகை









நீ
அன்று உதிர்த்த
புன்னகையின்
ஒரு நுனியைக் கிள்ளி
என்
இதயத்தின்
இடப்புறத்தில்
கட்டித் தொங்கவிட்டுள்ளேன்...
கட்டிப் போட்டா
குட்டி போடும் என்ற நினைப்பில்!

சந்து பொந்துகளிலெல்லாம்
நீ
சிந்திவிட்டுப் போன
சில்லறைச்
சிரிப்'பூ'க்களை
சிந்தாமல்
சிதறாமல்
சேமித்து வைத்திருக்கிறேன்...
சிரிக்கத் தெரியாதவர்களுக்கு
சில்லறை விலையில்
சப்ளை செய்ய!

3 comments:

Anonymous said...

புன்னகை குட்டி போடுமோ இல்லையோ உங்களின் இதுபோன்ற வித்தியாசமான ரசனைகள் குட்டி
போட்டு பெருகி எங்களை மகிழ்விக்கட்டும்

வாழ்த்துக்கள்
ரசிகவ் ஞானியார்

Ravikumar Veerasamy said...

கவிதை சூப்பர், இன்னும் ரெண்டு "ஸ்டான்சா" சேர்த்து எழுதியிருக்கலாமே!

Anonymous said...

First Para - Very Nice. VaazhthukkaL sir.