Sunday, November 18, 2007

தனிமைத் துணை


உன்னை இல்லமிட்டு வெளிச் சென்றால்
உளம் மகிழ மறுக்குது
உடன் பேசத் துணையின்றி
உயிர் தனித்துச் சாகுது

வாய் மூடா ஜாடி எனக்கு
வாய்ச்ச நல்ல மூடி நீயே
பக்கத்தில் நீ இருந்துவிட்டால்
பவர் எனக்குக் கூடும் சேயே

நறுக்கென்று இருக்குமே-அகவை
நான்கேயாகும் உன் கேள்வியே
சளைக்காத உன் கேள்விகட்கு
சலிக்காமல் பதிலும் தருவேனே

எத்தனிக்கும் வாகன இரைச்சலிலும்
எதிரொலிக்குது உன் இனிய குரலே
என்றைக்கும் உடன் வேண்டும்
என் அன்பு மகள் நீயே

6 comments:

Anonymous said...

என் மகள் ஊருக்கு சென்று இன்னும் முழுதாக ஒரு நாள் கூட ஆகவில்லை. இப்போது கூட போனில் பேசிவிட்டு தூங்க மனமில்லாமல் இணையத்தில் பொழுதை ஓட்டும் போதுதான் இந்த கவிதையைப் படித்தேன். தனிமை கடினம்தான். நீங்கள் கூறுவது முற்றிலும் சரியே. ஆயிரம்தான் ஆணாக இருந்தாலும் படித்தவுடன் கண்ணீர் தழும்புகிறது. அறுபது நாட்கள் ஆறு நிமிடமாகாதா என தோணுகிறது.

Anonymous said...

ரவிக்குமார் - ஆண் என்றால் என்ன கொம்பா முளைச்சிருக்கு? தாய், சேய், தாரம் 3-ம் விட்டு பிரிஞ்சிருந்தா கண்ணீர் இல்ல ரத்தமே வரும். நிழலின் அருமை வெயிலில்தான் தெரியும்.

ஜான் - என்னவளே, தாய், அக்கா, மகள் என உறவின் அருமையை புரிந்து எழுதுகிறீர். கற்பனையை தவிர்த்து அனுபவத்தை கவிதையாய் படைக்கும் உங்களுக்குக் ஒரு "சபாஷ்"

Agathiyan John Benedict said...

ரவிக்குமார் மற்றும் தென்றலைத் தேடி அவர்களே, உங்களது பாராட்டுதலுக்கு நன்றி.

"தென்றலைத் தேடி" அவர்களே,
கவிதை என்றாலே அது பெரும்பாலும் காதலைப் பற்றியதாகவும், கற்பனையாகவும் தான் இருக்கிறது; தவறில்லை. இதில் சற்று மாறுபட்ட எண்ணத்தோடு, எதாவது ஒரு "கருத்தை" மையமாக வைத்து, என் அனுபவத்தைக் கண் முன் நிறுத்தி, கவிதை (போல்) சில எழுதி வருகிறேன். இதனைக் கண்டறிந்து குறிப்பிட்டுப் பாராட்டிய உங்களுக்கு எனது சிறப்பு நன்றிகள்.

உங்களின் அடையாளத்தை நான் அறிந்துகொள்ளலாமா? சும்மா ஓர் ஆர்வம்தான்; வேறொன்ருமில்லை.

Anonymous said...

என் பெயர் நிர்மலா ராஜ், வசிப்பது யூ.எஸ். இன்டெர்னெட் கொஞ்சம் புதிசுதான். தங்களைப் போல பிளாக் எழுதவும் ஆசை உள்ளது, அதைப் பற்றி இப்போதுதான் ரிசர்ச் பண்ணிக் கொண்டிருக்கிறேன்.

Anonymous said...

நண்பரே!

வார்த்தைகள் மயங்க வைக்கின்றன. வாழ்த்துக்கள்!
நன்றி! வாழ்க வளமுடன்!

Agathiyan John Benedict said...

நன்றி திருமதி. தென்றலைத் தேடி அவர்களே!
உங்களின் பிளாக்கைப் படிக்க வெகு ஆர்வமாய் இருக்கிறேன். ஆரம்பியுங்கள். வாழ்த்துக்கள்.