Tuesday, January 1, 2008

தவளை ஆண்டு 2008


பிரசுரமான இதழ்கள்: திண்ணை,தமிழோவியம்,தமிழ் சிஃபி

தந்தை கையைப் பிடித்துக் கொண்டு
தடுக்கிவிடும் நெல் வரப்பு மீது
தத்தித் தத்தி நான் நடந்த போது
தாவித் தாவிக் குதித்த தவளை

பாசி படர்ந்த குட்டைக்குள்ளே
பச்சை நிறத்தில் நீந்தும் தவளை
பாவி மனுஷன் சூப்பு வைக்க
பரிதாபமாய் பலியாகும் தவளை

தூண்டிலில் உணவாய் உயிர்விடும் தவளை
பாம்பின் பசிக்கு புசியாகும் தவளை
மனம் கல்லாய்ப் போன மனிதருக்கும்
மருந்தாய் இருந்திட மரித்திடும் தவளை

அந்தி மழை பொழியும் போதும்
அடை மழை வழியும் போதும்
அல்லும் பகலும் பேதமின்றி
அயராமல் கத்தி மகிழும் தவளை

அழிந்து வருதாம் அந்தத் தவளையினம்
அக்கறை கொண்ட ஐநா சபை
ஆண்டு 2008-ஐ தவளை ஆண்டாய்
அறிவிப்புச் செய்திட்ட ஆறுதலோடு
ஆரம்பமாகிற்று அடுத்ததோர் ஆண்டு

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

7 comments:

Anonymous said...

சரம்சரமாய் முட்டை இடும் தவளை

கொஞ்சம் பாப்பா பாட்டு போல் மாற்றினால் மழழைகள் பொட்டு கோம் தளத்தில் சேர்த்திடலாம்.

Anonymous said...

(கவிதை)நல்லாருக்கே தவளை! :)

Anonymous said...

குளத்தங்கரையில் காத்திக்கத்தியே, பாம்பின் கவனத்தைக் கவர்ந்து அதற்கு இரையாகிவிடும் தவளை என்ற தவறான கருத்து உண்டு.
ஆண்தவளைகள் தன் இணையைக் காத்தியும் தன் கழுத்தின் காற்றுப்பையை ஊதியும்
கவரும், அதனால் கெடும்!!!
----------
தவளை தோலின் மூலம் சுவாசிக்கும் சிறப்புக்கொண்டது.

--
http://tamilkurinchi.blogspot.com/
"எல்லாவுயிர்களும் இன்புற்று வாழ்க"
அன்பன்,
ஈஸ்வர்

Agathiyan John Benedict said...

திரு. மஞ்சூர் மற்றும் திரு. வேந்தன் அவர்களே,

தங்களின் பொருள்மிகு கருத்துக்களுக்கு நன்றி. ஆகிரா அய்யாவா பாத்து இதை
குழந்தைகளுக்கு ஏற்றாற்போல் மாற்றிக்கொள்வார் என நம்புகிறேன். எனக்கு அந்த அளவுக்கு ஞானம் பத்தாது. ஆனால் குழந்தைகள் பாடல் எழுத முயலத்தான் போகிறேன் -:)

Anonymous said...

அன்பு ஜான்,

ஏற்கெனவே இக்கவிதை குழந்தைகளுக்கேற்ற எளிய நடையில் உள்ளது. இது திண்ணை தளத்தில்
வெளிவந்துள்ளதால் அதனை மீண்டும் மழலைகள் தளத்தில் இடுவதை விட அதன் சுட்டியை
மழலைகள் தளத்தில் இடுவதுவே சரி.

A.K. Rajagopalan
http://www.mazhalaigal.com

Anonymous said...

வணக்கம்.
தவளையைப் பற்றிய கவலை தோய்ந்த கவிதை. பாராட்டுக்கள்.

அன்புடன்
நந்திதா

Anonymous said...

நல்ல கவிதை ஜான். கிராமங்களில் வாழ்ந்தோருக்கெ தவளையின் அறிமிகமும் அதன் இருப்பு நமக்கு ஏற்படுத்தும் மகிழ்ச்சியையும் உனர முடியும். நல்ல விதமாய் இயற்கை மீதான அக்கறையுடன் வாழ்த்திய உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் ஜான்.

ஜெயக்குமார்