புவி வெப்பமும் பொங்கலும்
வட அமெரிக்கா...
கடும் குளிர் ஜனவரியும்
கதகதப்பா யிருக்குதிங்கே
கால நிலை மாற்றத்தின்
காரணி யிதுதானோ?
தமிழகம்...
பருவம் வருதுன்னு
பயிரிட்ட நெல் வயலெல்லாம்
பருவமழை பொய்த்ததனால்
பட்டு அழிஞ்சு போனபின்னே
பரவலாக (பருவ)மழை பெய்தும்
பலனின்றிப் போனதங்கே
தாமதமா மழைபெஞ்சு
தாமதமா பயிர்செஞ்சா
தை மாதம் விளையாது-விவசாயிக்கு
தைப் பொங்கல் இனிக்காது
கால மாற்றத்திற் கேற்ப
காலண்டரை மாற்றுங்களே-அறுவடைவரை
தள்ளிக் கொஞ்சம் போடுங்களே-பொங்கலை
தள்ளிக் கொஞ்சம் போடுங்களே
3 comments:
Global warming explained by a neat and simple kavithai. Admire your simple choice of words.
நன்றி நண்பரே.
அட ... வித்தியாசமான கோணம்!!!
Post a Comment