Friday, September 26, 2008

பிரதமரின் கவனத்தை ஈர்க்க வாசிங்டனில் அமைதிப் பேரணி


செப்டம்பர் 25-ம் நாள் வியாழக்கிழமை மாலை, மாண்புமிகு பாரதப் பிரதமர் முனைவர். மன்மோகன்சிங் அவர்கள் அமெரிக்க அதிபர் திரு. ஜார்ஜ் புஷ் அவர்களை வாசிங்டனில் வெள்ளை மாளிகையில் சந்தித்துப் பேசினார். அதேசமயம் வட அமெரிக்க இந்தியக் கிறிஸ்தவ அமைப்புகளின் கூட்டமைப்பு FIACONA சார்பாக, வெள்ளை மாளிகையின் வடக்கு வாயிலில் அமைதிப் பேரணியும், ஜெப வழிபாடும் நடைபெற்றது. இந்தியாவின் ஒரிஸ்ஸா, கர்நாடகம் மற்ற சில மாநிலங்களில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடைபெற்றுக்கொண்டிருக்கும் வன்முறையைத் தடுத்து நிறுத்திட, பிரதமர் அவர்கள் தனது அதிகாரத்தைப் பயன்படுத்திட வேண்டுமெனக் கேட்டுக்கொள்வதே பேரணியில் கலந்துகொண்டவர்களின் நியாயமான கோரிக்கையாக இருந்தது. தொடர் மழையையும், வீசியடித்த குளிர் காற்றையும் பொருட்படுத்தாது, பல தேசங்களைச் சேர்ந்த மக்கள் இந்தப் பேரணியில் கலந்துகொண்டனர். மேலும் உள்ளூர் பத்திரிக்கையாளர்களும் இந்தப் பேரணியைச் செய்தியாக்கிக் கொண்டதால், தங்களின் போராட்டம் வெற்றி பெற்றதாக அறிவித்தார் பேரணி அமைப்பாளர் திரு. ஜோ குரூஸ் அவர்கள்.

2 comments:

இனியா said...

நீங்களும் கலந்துக்கொன்டீர்களா?
இந்த மத வெறி அளவுக்கு மீறி இந்தியாவில்
வளர்ந்துக்கொண்டே போகிறது. அரசு கவனம் செலுத்தி
இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தே ஆக வேண்டும்.
இந்த வன்முறைகளையும் ஆதரித்து விவாதம் செய்யும்
நண்பர்களை நினைத்தால் வருத்தமாக இருக்கின்றது.

Anonymous said...

Check this

http://www.tamilnaatham.com/photos/2008/sep/20080925/USA/