பட்டிமன்ற உரை – ஒலிப்பதிவு
வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) சார்பில் 2008 ஜீலை மாதம் 4 முதல் 6 வரை அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்திலுள்ள Orlando நகரில் நடைபெற்ற தமிழ் விழாவில், பேராசிரியர் ஈரோடு மகேஷ் அவர்களின் தலைமையிலான பட்டிமன்றத்தில் நான் ஆற்றிய உரையின் ஒலிப்பதிவு.
தலைப்பு: இனி, தமிழ் வளர்வது தாய்த் தமிழ்மண்ணிலா? வேற்றுமண்ணிலா?
"வட அமெரிக்காவின் மிகச் சிறந்த பேச்சாளர்" என்றார்கள். "வாசிங்டன் வைகோ" என்றெல்லாம் சொன்னார்கள். எனது பேச்சைப் பாராட்டியோர்களில் குறிப்பிடத்தக்கவர் தமிழ்நாட்டிலிருந்து நிகழ்ச்சிக்கு வந்திருந்த பேராசிரியர் சுப. வீரபாண்டியன் அவர்கள். அன்று நான் சற்று ஆக்ரோசமாகப் பேசியது உண்மைதான். ஆனாலும், இன்னும் சிறப்பாகச் செய்யவேண்டும்; அது முடியும் என்றே என் உள்மனம் உரைக்கிறது.
தன்விளக்கம்: எனக்கு வழங்கப்பட்ட தலைப்பிற்கு வலுசேர்க்கும் வகையில், வேற்றுமண்ணிலிருந்து நான் பேசிய இந்தப் பேச்சு, நீங்கள் எந்த நாட்டிலிருந்து கேட்கிறீர்கள் என்பதைப் பொறுத்து சரியாகவோ, தவறாகவோ படலாம். பொறுத்தருள வேண்டுகிறேன்.
|
4 comments:
வாழ்த்துக்கள். உங்கள் குரல் வளம் அருமை. கருத்துக்களும் மிக அருமை. இந்த வருட தமிழர் திருவிழா பற்றிய முதல் பதிவு இது தான் என்று நினைக்கிறேன். மற்ற நிகழ்ச்சிகளைப் பற்றியும் எழுதுங்களேன்.
நன்றி.
சௌந்தர்.
உன்மைய்யான ஆக்ரோசமான பேச்சு.
கிருத்திகா
Houston- TX
super!!!
வணக்கம்.உரை முழுவதும் கேட்டு மகிழ்ந்தோம்
உரத்த சிந்தனை
அழுத்தமான கருத்துக்கள்
கூர்மையான சவால்கள்
அசைக்க முடியாத நியாயங்கள்
தமிழகத்துப் பெரியோர்கள் ஆராய வேண்டிய உண்மைகள்
தெளிவாக எடுத்து வைக்கப் பட்டுள்ளன
பாரதி இருந்திருந்தால் பாராட்டி இருப்பான்
போற்றுகின்றேன் உம்முடைய தமிழ்ப் பற்றினை
தமிழ்த் தாய் உங்களால் பெருமைப் படுவாள்
அன்புடன்
நந்திதா
Post a Comment