Wednesday, November 12, 2008

பெரியார்

'பெரியார் இன்டர்நேஷனல்' சார்பாக வாசிங்டனில் நடைபெற்ற பெரியார் பிறந்தநாள் விழாவில் வாசித்தளிக்கப்பட்ட கவிதை (மாதிரி)!

பிறந்தது ஈரோடு; இன்றும்
வாழுகின்றார் நல்ல பெயரோடு
வசதி வாய்ந்த வணிகக் குடும்பம்
வாய்ப் பேச்சில் வானமும் நடுங்கும்
ராமசாமி நாயக்கர் மண்டி-இவரது
கவனமெல்லாம் சமூகத் தொண்டில்

பருவப்பெண்ணில் காதல் கொண்டு
பல பேரு தாடி வைக்க
பகுத்தறிவில் காதல் கொண்டு
தாடி வளர்த்த தந்தை இவர்

தூய தாடி மார்பில் விழ
தொண்டு செய்து பழுத்த பழம்
பதவி ஆசை துறந்ததனால்
பல காலம் வாழ்ந்த பழம்
பழுத்து நல்லா கனிஞ்ச பழம்

குப்பனுக்கும் சுப்பனுக்கும்
குற்றுயிராய்க் கிடந்தவனுக்கும்
குரல் கொடுக்க வந்த கிழம்
குலத் தாழ்ச்சி மாய்த்த சிங்கக் கிழம்

பிறப்பால் இழிவென்றவனை
பிரம்பால் அடித்த வீரன்
தீண்டாமைக் கொடுமைதனை
தீயிலிட்டழித்த சூரன்

பாகங்கள் வளர்ச்சி பெறும்
பதின்மப் பருவமதில்
பகுத்தறிவு முளை கொண்டதால்
'பகுத்தறிவுப் பகலவன்' பட்டம் பெற்ற முனைவன்

பாரினில் பல தேசம் சென்று
பகுத்தறிவுச் சமத்துவத்தை பரப்பிய போதகன்
இட ஒதுக்கீடு தீபமதை
ஏற்றி வைத்த சமூக நீதிச் சுடரொளி

ஆத்திக மனைவியையும்
நாத்திக மாக்கிடத் துணிந்தவர்
போராட வேண்டியே
பிள்ளைவரமும் துறந்தவர்

சாத்திரத்திற்காகவே தமிழை வளைத்த
சூத்திரர்களைச் சாடிய சாட்டை
மூட நம்பிக்கைகளை மீசையிலே வடிகட்டி
பகுத்தறிவுக் காற்றையே சுவாசித்த கறுப்புச் சட்டை

ஜாதி நோயால் செத்துக் கொண்டிருந்தவனுக்கு
சுய மரியாதை ஆக்சிஜனைச் செலுத்திய சிலிண்டர்
காசிக்குச் செல்வார் புண்ணியந்தேடி
திராவிடர் புண்ணியம் பெற்றார் பெரியாரைக் காசிக்கு அனுப்பி

கறுப்புச் சட்டை அணிந்த
நெருப்பு மனிதர் பெரியார்
ஹிந்தியைத் தந்திவேகத்தில்
அடித்து விரட்டியவர் பெரியார்

எண்ணிலடங்கா கடவுளர்களை
எரித்த கடவுள் பெரியார்
மறைமலை அடிகளின் மகள் நீலாம்பிகை நடத்திய
மகளிர் மாநாடு வழங்கிய பட்டமே 'பெரியார்'

கருப்புக் காந்தி காமராஜரை
கண்ணில் காட்டிய வித்தகர்
குலக் கல்வித் திட்டத்தை
ராஜாஜியின் குலக் கல்வித் திட்டத்தை
குழியில் தள்ளிப் புதைத்தவர்
ராஜாஜி போயாச்சு காமராஜு வந்தாச்சு

ஜாதியுத்தம் களையவேண்டி அம்பேத்காரை
புத்தமதம் தழுவத் தூண்டிய மாங்கு
திராவிட நாடு கேட்டு திராவிடனையே
துயிலெழச் செய்த அபாயச் சங்கு

பிறந்தது ஈரோடு; இன்றும் என்றும்
வாழுகின்றார் நல்ல பெயரோடு!!!

4 comments:

Anonymous said...

*அவரின் வாழ்க்கையை அப்படியே வடித்திருக்கின்றீர்கள்..***

> குப்பனுக்கும் சுப்பனுக்கும்
> குற்றுயிராய்க் கிடந்தவனுக்கும்
> குரல் கொடுக்க வந்த கிழம்
> குலத் தாழ்ச்சி மாய்த்த சிங்கக் கிழம்


> பிறப்பால் இழிவென்றவனை
> பிரம்பால் அடித்த வீரன்
> தீண்டாமைக் கொடுமைதனை
> தீயிலிட்டழித்த சூரன்<<<

*மிகவும் ரசித்தேன். *

> பிறந்தது ஈரோடு; இன்றும் என்றும்
> வாழுகின்றார் நல்ல பெயரோடு!!!!!

* எதுகை மோனையோடு நல்லாவே எழுதி இருக்கீங்க!!...*

--
என்றென்றும்
சுதனின்விஜி

"நாமார்க்கும் குடியல்லோம்"
நமனை அஞ்சோம்"

Anonymous said...

நல்ல பதிவு…

வாழ்த்துக்கள்

தமிழ் ஓவியா said...

பெரியாரை படம் பிடித்த பாங்கு சிறப்பாயிருக்கிறது.
நன்றி.

Anonymous said...

Nalla kavithai. Naaddu Nallavar pottum Periyar.

I visited your blogg after long time. Only one more kavithai has been added.

Sub