வாசிங்டனில் பன்னாட்டுப் புறநானூற்று மாநாடு
தமிழனின் பண்பாட்டுப் பெட்டகமாகிய புறநானூற்றுக்கு, உலக வரலாற்றிலேயே முதல் முறையாக வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கமும் , வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையும் இணைந்து பன்னாட்டு புறநானூறு மாநாடு - International Conference on PuRaNaanooRu (ICP) ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புறநானூற்றுக் கருத்துக்களை வட அமெரிக்காவில் உள்ள தமிழ் மக்களிடமும், இளைஞர்களிடமும், மற்றவர்களிடமும் அறிமுகப்படுத்தும் நோக்கத்தோடு, பல்வேறு போட்டிகளும், புறநானூறு சார்ந்த நாட்டிய, நாடக நிகழ்ச்சிகளும் இடம்பெறவிருக்கின்றன. புறநானூற்றின் பெருமையை உலகுக்கு உணர்த்தும் வண்ணம் தமிழறிஞர்கள் பலர் இந்த மாநாட்டிற்கு அழைக்கப்பட்டிருக்கிறார்கள். புறநானூற்றைப் பற்றியும் தமிழரின் சங்ககால வாழ்வியலைப் பற்றியும் அறிந்துகொள்ள ஒரு அரிய வாய்ப்பு! ”வருக, வருக” என்று அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்!
Saturday August 31, 2013 from 1:00 PM to 9:00PM
Sunday September 1, 2013 from 9:00 AM to 8:00 PM
இடம்: Montgomery College Cultural Arts center – Theater 1
7995 Georgia Ave, Silver Spring, MD 20910
Web: http://www.classicaltamil.org/#
சங்கத் தமிழின் பெயரால் சங்கமிப்போம்! சாதனைகள் பல நிகழ்த்துவோம்!
அன்புடன்,
வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கம் & வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை
1 comment:
மிகவும் அற்புதமான விடயம், தமிழர் வாழ்வியலை எடுத்தியம்பும் களஞ்சியம் புறநானூறு அதனை பன்னாட்டு அளவில் கொண்டு போக முனைந்தமை பாராட்டுதற்கு உரியது.
Post a Comment