தேம்பாவணி - சிற்றுரை
வாசிங்டன் தமிழ்ச்சங்கம் சார்பில் நடந்த இலக்கியக் கூட்டத்தில், கிறிஸ்தவத் தமிழ் இலக்கியமான தேம்பாவணிபற்றி நான் ஆற்றிய சிற்றுரை.
என் இதயத்துக்குள் புதைந்து கிடக்கும் கடந்த கால வாழ்க்கையையும், நிகழ்கால அனுபவங்களையும் கவிதை, கட்டுரை, ஒலி, ஒளி வடிவில் நான் இறைத்துப் போட்டிருக்கும் வேலியில்லா களத்து மேடு. Disclaimer: நான் கவியரசோ, கவிப்பேரரசோ அல்ல; கவிதைச் சோதனையில் களமிறங்கியிருக்கும் 'கத்துக்குட்டி'. கற்றுவிட்டு கவிதை எழுத வரவில்லை; மாறாக, கவிதை எழுதிக் கற்றுக்கொள்ள வந்திருக்கிறேன்... கவனம் தேவை!
வாசிங்டன் தமிழ்ச்சங்கம் சார்பில் நடந்த இலக்கியக் கூட்டத்தில், கிறிஸ்தவத் தமிழ் இலக்கியமான தேம்பாவணிபற்றி நான் ஆற்றிய சிற்றுரை.
Posted by
Agathiyan John Benedict
at
9:45 PM
0
comments
Labels: அனுபவம், இணைய வீடியோ, கிறிஸ்தவம், தமிழ்ச் சங்கம்
உலக வரலாற்றிலேயே முதல் முறையாக, ஆகஸ்டு 31 மற்றும் செப்டம்பர் 1, 2013 தேதிகளில் நிகழவிருக்கும் பன்னாட்டு புறநானூறு மாநாட்டுக்கான பணிகள் விமரிசையாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த விழாவின் சிறப்பு அம்சமாக, தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் நிகழ்த்திக் காட்டப்பட்ட "முத்தமிழ் முழக்கம்" என்ற புறநானூறு சார்ந்த நாட்டிய நாடக நிகழ்ச்சியும், "சிவகாமியின் சபதம்" வரலாற்று நாடகமும் நடைபெறவிருக்கின்றன.
இந்த மாநாட்டில் கலந்துகொண்டு சங்க இலக்கியத் தேன் துளியைப் பருகிச் செல்லுமாறு அன்புடன் வேண்டுகிறோம். மேலதிக விவரங்களுக்கு, Click Here for the Flier
Posted by
Agathiyan John Benedict
at
12:45 PM
1 comments
தமிழனின் பண்பாட்டுப் பெட்டகமாகிய புறநானூற்றுக்கு, உலக வரலாற்றிலேயே முதல் முறையாக வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கமும் , வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையும் இணைந்து பன்னாட்டு புறநானூறு மாநாடு - International Conference on PuRaNaanooRu (ICP) ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புறநானூற்றுக் கருத்துக்களை வட அமெரிக்காவில் உள்ள தமிழ் மக்களிடமும், இளைஞர்களிடமும், மற்றவர்களிடமும் அறிமுகப்படுத்தும் நோக்கத்தோடு, பல்வேறு போட்டிகளும், புறநானூறு சார்ந்த நாட்டிய, நாடக நிகழ்ச்சிகளும் இடம்பெறவிருக்கின்றன. புறநானூற்றின் பெருமையை உலகுக்கு உணர்த்தும் வண்ணம் தமிழறிஞர்கள் பலர் இந்த மாநாட்டிற்கு அழைக்கப்பட்டிருக்கிறார்கள். புறநானூற்றைப் பற்றியும் தமிழரின் சங்ககால வாழ்வியலைப் பற்றியும் அறிந்துகொள்ள ஒரு அரிய வாய்ப்பு! ”வருக, வருக” என்று அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்!
Saturday August 31, 2013 from 1:00 PM to 9:00PM
Sunday September 1, 2013 from 9:00 AM to 8:00 PM
இடம்: Montgomery College Cultural Arts center – Theater 1
7995 Georgia Ave, Silver Spring, MD 20910
Web: http://www.classicaltamil.org/#
சங்கத் தமிழின் பெயரால் சங்கமிப்போம்! சாதனைகள் பல நிகழ்த்துவோம்!
அன்புடன்,
வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கம் & வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை
Posted by
Agathiyan John Benedict
at
11:46 AM
1 comments
Labels: தமிழ்ச் சங்கம்
வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் கலந்துகொண்டு முதற்பரிசு பெற்றாள் எனது ஏழுவயது மகள் ஷர்லி.
Posted by
Agathiyan John Benedict
at
10:13 PM
0
comments
Labels: அனுபவம், இணைய வீடியோ, தமிழ்ச் சங்கம்
உனை அழவைக்கும் உறவு
உன் உறவுக்குத் தகுதியற்றது
உன் அழுகைக்கு தகுதியான உறவு
உனை ஒருபோதும் அழ விடாது
உறவை நினைத்து அழாதே...
Posted by
Agathiyan John Benedict
at
12:21 PM
4
comments
Labels: கவிதை