அன்புள்ள மகனுக்கு...
குறிப்பு: இந்தக் கவிதை "தென்றல் முல்லை" இதழில் பிரசுரமாகியது
கடைக்குட்டி யாயினும்
கலங்கரை விளக்கம் நீ
கல்வியிலா என் வயிற்றில்
கற்றுத் தேர்ந்த கலைஞன் நீ
வாய்க்கால் வெட்டி பயிரிட்டவனும்
வாசிங்டன் வாழ இயலுமென-இவ்
வட்டாரத்திற்கே வழிகாட்டிய
வால் நட்சத்திரம் நீ
காண்பதில்லை உனை யெனினும்-உன்
காசு என்னைக் காக்குதப்பா
கண்டங்கள் நீ தாண்டிடாவிட்டால்
கடன்பட்டு எனக்கு வைத்தியம் கனவுதானப்பா
உயிர் போகும் முன்னாக
உனைக் காண தாய் அழைத்தேன்
உடன் பறந் தோடிவந்து
உன் இல்லம் திருச்சி யடைந்தாய்
உன் மகன் உடனிருப்பான்-இன்னும்
ஓர் மணி நேரத்தில் என
உறுதியாய் உரைத்தனர் உம்
உடன் பிற சகோதரிகள்
இறுதியில் உறுதியாச்சு-என்
இறுதிச் சடங்கில் நீ நடப்பது
இதயமும் துள்ளியது-என்
இறுதி ஆசை நிறைவேறிய தென்று
புதுகை வந்தெனைக் காணுங்கால்
புலம்பி நீயழுவது காணலாமோ
புரிந்துகொண் டுயிர் பிரிந்துவிட்டேன்
புதுக்கோட்டை எல்லை நீ நுழையுமுன்னே!
புரிந்துகொள்ளடா புடமிட்ட என் சின்னவனே...
என் தாயின் முதலாவது நினைவு நாள்
18 comments:
மனதைத் தொட்ட கவிதை பெனடிற்.
உங்களின் தாயார் ஆத்மா சாந்தியடைய கர்த்தர் துணைபுரிவாராக.
எனது பால்ய நண்பன் ஒருவனின் பெயரும் பெனடிற் தான். இப்போது தொடர்புகள் இல்லை. (-:
நன்றி வெற்றி. தொடர்பில்லாமல் போன உங்களின் பால்ய நண்பனுக்குப் பதிலாக வந்த பெனடிக்ட் தான் நான் -:)
அருமையான உணர்வுகள். நல்ல கவிதை ஜான்.
- சூர்யா
தம்பி பெண்டிக்ட்
தாய் பற்றியக் கவிதை நன்றாக இருக்கிறது.
இது தமிழ் உணர்வுடன் தாயின் பெருமைக் கலந்து எழுதப் பட்ட ஒரு நல்ல படைப்பு.
உங்கள் தமிழ் மற்றும் சமூக சேவைகள்
வளர வாழ்த்துக்கள்.
அன்புடன் அண்ணன்
நாஞ்சில் எ. பீற்ற்ர்
அண்ணன் பீட்டர் அவர்களே, தாயின் பெருமையை மட்டுமன்றி தமிழ் உணர்வையும் தாங்கி நிற்கிறது எனது கவிதை என்று மிகச் சரியாகச் சொல்லியுள்ளீர்கள். அண்ணன் உங்களின் அன்புப் பாராட்டுதலால், அகம் குளிர்ந்து நிற்கிறேன் அன்புத் தம்பி ஜான்.
Ninaivalaigal are strong as kadalaigal.
தாய் தந்தையை போற்றி கவி எழுதும் பலர் மத்தியில், மரித்து போன தாய், பறந்தோடி வந்தும் காணமுடியலையே என்ற ஏக்கத்தை தாங்கி சோகத்தை மறக்காமல் வாழும் மகனுக்கு பாட்டு படிப்பதாக அமையும் தங்கள் கவிப் பார்வை பாராட்டுக்குரியதே. தங்கள் தாயாரின் ஆத்மா சாந்தி அடையவும், தங்களின் ஏக்கம் தீரவும் நீங்கள் நம்பும் ஆண்டவனை இத்தருணத்தில் வேண்டிக்கொள்கிறேன்.
Hi John,
I admire your writing skills. Wonderful tamil and appreciate your skills.
I wanted to comment about the content of the poem.
For your Mother's memory, it would be appropriate if you write a letter to her. In my mind, that is the correct tribute to can give to your mom.
The reason we are here in US is not because of us. It is because of our parents. Their pain to bring us up even with that financial situation. The money we pay back is just a penny compared to their contribution to US. There is nothing to be proud to live in US; becuase it is life given by your mom.
So, write about your mom. Write a beautiful poem, with your excellent Tamil skills, for her.
Hi John,That was a very good tribute your mother. I did enjoyreading your kavithai. keep doing your good work.
Thank you very much John, that was a wonderful poem, I lost my mother too last year and had her first anniversary on March 3rd. So as I read it, I felt as though my mother spoke to me, because I lost her in similar emotions and thoughts. Thanks again John. Can I however suggest one things. Your poem is your perception of her thoughts, imagine yourself in her place and imagine your son to be far away and you longing for the touch and presence of him by your ailing side. You have had everything, life, youth, happiness, family everything, but now at the old age you need nothing but your son's presence and love. You will give anything for just his presence to be beside you to hear him say how much he loves you and adores you and that too knowing well you are not going to live long..........I feel such a poem would touch you more deep. This is just a thought so do not mistake me. Your poem touches me and my heart but it is missing that empathy, that special motherly sentiment that can touch the innder feeling like nothing else. Thanks again. Take care.
புலம் பெயர்தோர் வாழ்வில் ஒருநாள் இது நடந்துதான் விடுகிறது
Really nice. Missing your friendship a lot.
Lakshmanan S C K
Good one. Hope you and family is doing good.
Best Regards
Benno
John, it made me cry...
Very touching and emotional
It's very nice and emotional
Ramesh
Michaelpatty
I chanced to have a glance of your poem about the letter from mom too. Good portrayal of imagination blended with emotion. The affection of a mother candidly knows no bounds...
Keep in touch.
Regards,
T. S. Michael
Saudi Arabia
Really very very nice... touched me...
Post a Comment