பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் வாரிசு எங்கே?
அக்டோபர் 8 - பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நினைவு நாள். சிறு வயதிலேயே மறைந்து விட்டாலும், தனது பாக்களால் இன்றும் நம் உதடுகளில் உருண்டோடி விளையாடும் கம்யூனிசக் கவிஞன் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். அதிவேக வளர்ச்சி இருந்தால், அதே வேக வீழ்ச்சி இருக்கும் என்பார்கள். இளவயதிலேயே அதிவேக வளர்ச்சியைக் கொண்டிருந்தாலும், இன்று வரை வீழாமல் நம் நெஞ்சங்களில் வாழ்ந்து கொண்டிருப்பவன் தான் பட்டுக்கோட்டை.
தஞ்சை மாவட்டத்தில் பட்டுக்கோட்டைக்கு அருகில் உள்ள செங்கப்படுத்தான் காடு என்ற கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்த கல்யாணசுந்தரம், பெரும்பாலான விவசாயிகளின் பிள்ளைகளைப் போலவே, தானும் பள்ளிப் படிப்பு முடிக்காதவர். தன்னுடைய இளம் வயதில், பெரியாரின் சுய மரியாதை இயக்கத்தினால் ஈர்க்கப்பட்ட கல்யாணசுந்தரம், சில உள்ளூர் கம்யூனிசத் தலைவர்களுடன் ஏற்பட்ட தொடர்பால், கம்யூனிசத்தின் மீது காதல் கொண்டார். சுய மரியாதை இயக்கக் கூட்டங்களிலும், கம்யூனிச மேடைகளிலும் பாடினார்.
கவித்திறமை தன்னிடம் இருப்பதை உணர்ந்திருந்தாலும் கூட, தன்னுடைய மிடுக்கான தோற்றத்தின் காரணமாக, நடிக்க வேண்டும் என ஆசைப்பட்ட கல்யாணசுந்தரம், மதுரையில் இருந்த சக்தி நாடக சபாவில் சேர்ந்தார். இந்த நாடகக் குழு ஒருமுறை புதுச்சேரி சென்றிருந்தபோது, பாவேந்தர் பாரதிதாசனை சந்திக்கும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. இவ்வாய்ப்பின் மூலம், பாரதிதாசனின் உதவியாளராகப் பணியில் சேர்ந்தார். மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்துக்குப் பாரதிதாசன் பாடல்கள் எழுதிக்கொண்டிருந்த நேரம் அது. இதன் மூலம் திரைப்பட நிறுவனங்களோடு பட்டுக்கோட்டையாருக்குத் தொடர்பு உண்டானது. சென்னையிலேயே தங்கிய கல்யாணசுந்தரத்திற்கு, திரைப்படங்களுக்குப் பாடல் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. அவர் எழுதிய திரைப்படப் பாடல்களை நான் சுட்டிக்காட்ட வேண்டியதில்லை. கம்யூனிசத் தலைவர் திரு. ஜீவா அவர்களின் ஜனசக்தி பத்திரிக்கையில் கம்யூனிசக் கருத்துக்களையும் தொடர்ந்து எழுதி வந்தார்.
இந்தச் சூழ்நிலையில், தனது குரு பாரதிதாசனின் தலைமையில், செப்டம்பர் 11, 1957-ல் சென்னையில் பட்டுக்கோட்டையாருக்கும், கெளரவம்பாளுக்கும் திருமணம் நடைபெற்றது. ஓரிரு ஆண்டுகளில் இத்தம்பதியருக்கு குமாரவேல் என்ற மகன் பிறந்தான்.
திரைப்படங்களுக்குப் பாடல் எழுதுவது தொடர்ந்தது. வயல் வெளியில் உழைக்கும் அன்றாடங்காய்ச்சிகளோடு தானும் சிறுவயதில் அன்றாடம் உழைத்ததால், சாமான்ய மக்கள் அனுபவிக்கும் கஷ்டங்களை மிக நன்றாகவே பட்டுக்கோட்டையார் அறிந்திருந்தார். அதையே தன்னுடைய பாடல்களிலும் வெளிப்படுத்தினார். மிக எளிதான வார்த்தைகளைக் கொண்டு, பாமரரும் பாடும்படியாகப் பாடல் எழுதுவது இவரது தனிச்சிறப்பு. உதாரணமாக "தூங்காதே தம்பி தூங்காதே... நீ சோம்பேறி என்ற பெயர் வாங்காதே" என்ற பாடல். புகழோடு வாழ்ந்த காலத்திலும், சாமான்ய மக்களை மறக்காமல் அவர்களைப்பற்றிப் பாடல்களை எழுதியதற்காகவும், தான் ஏற்றுக்கொண்ட கம்யூனிசக் கொள்கைபற்றிய பாடல்களை எழுதியதற்காகவும், "மக்கள் கவிஞர்" என்ற பட்டம் வழங்கப்பட்டது.
சுமார் ஐந்தாறு ஆண்டுகளில், தனது பாடல்களால் புகழின் உச்சியை அடைந்துகொண்டிருந்த பட்டுக்கோட்டையாருக்கு, தலைவலி காரணமாக அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட இரத்தக் கசிவின் காரணமாக, சற்றும் எதிர்பாராத விதமாக, அக்டோபர் 8, 1959-ல் மரணம் இந்த மக்கள் கவிஞனை அள்ளிக்கொண்டு சென்று விட்டது. மரணத்தைத் தழுவிய போது மக்கள் கவிஞனுக்கு வயது வெறும் 29 மட்டுமே! காலத்தை வென்ற இந்தக் கவிஞனுக்கு எனது கண்ணீரஞ்சலி.
உங்களுக்கு ஓர் கேள்வி:பட்டுக்கோட்டையாரின் மகன் குமாரவேலின் தற்போதைய நிலைமைபற்றி உங்களுக்கு ஏதேனும் தெரியுமா?
12 comments:
ஆடு மாடு கோழிக்கு கூட
ஆளுக்கு ரெண்டு BLOG இருக்கு
ungka aduththa blog ethungka?
தமிழர் மனங்களில் என்றென்றும் நின்று இன்பம் தரும் பாடல்களை அளித்த
பட்டுக்கோட்டையாரை சரியான நேரத்தில் நினைவு கூர்ந்தமை மிகவும் நன்று.
தூங்காதே தம்பி தூங்காதே
சோம்பேரி என்ற பெயர் வாங்காதே
நீ தாங்கிய உடையும் ஆயுதமும் - பல
சரித்திரக் கதை சொல்லும் சிறைக் கதவும்
சக்தி இருந்தால் உனைக் கண்டு சிரிக்கும்
சத்திரந்தான் உனக்கு இடம் கொடுக்கும்
நல்ல பொழுதையெல்லாம் தூங்கிக் கெடுத்தவர்கள்
நாட்டைக் கெடுத்ததுடன் தானுங்கெட்டார் - சிலர்
அல்லும் பகலும் தெருக் கல்லாயிருந்துவிட்டு
அதிர்ஷ்டம் இல்லையென்று அலுத்துக்கொண்டார்
விழித்துக்கொண்டோரெல்லாம் பிழைத்துக்கொண்டார் - உன் போல்
குறட்டை விட்டோரெல்லாம் கோட்டை விட்டார்
போர்ப் படைதன்னில் தூங்கியவன் வெற்றியிழந்தான் - உயர்
பள்ளியில் தூங்கியவன் கல்வியிழந்தான்
கடைதனில் தூங்கியவன் முதல் இழந்தான் - கொண்ட
கடமையில் தூங்கியவன் புகழ் இழந்தான் - இன்னும்
பொறுப்புள்ள மனிதனின் தூக்கத்தினால் - பல
பொன்னான வேலையெல்லாம் தூங்குதப்பா
AK Rajagopalan,
Kancheepuram
ஜான்
பட்டுகோட்டையார் பற்றி சரியான நேரத்தில் அவரை நினைவு கூர்ந்தமைக்கு நன்றி!!!
தொடர்ந்து எழுதுங்கள்...
நன்றி
மயிலாடுதுறை சிவா...
Dear Mr. John Benedict:
Thanks for your article on Pattukkottai. Relatively brief, yet very powerful with clarity. Best reminder for Tamil speaking people.
Wish you the best on your writings.
Dr.Selvin Kumar
He made revolution (Puratchi) in Tamil Nadu through writing songs. Thanks for remembering.
Dear thampi Benedict:
A well-written article. Keep up the good work.
nanjil e. peter
Looks like you are into new career. Probably you should write some articles in Tamil Magazines
Good Luck
Best Regards
Benno, Australia
Dear John,
You have done a praiseworthy job in paying a noble tribute to Peoples Poet Kalyansundaram. Many so called poets even have forgotten that marvellous poet.
The article though in a compressed form, impressed me.
Regards,
T. S. Michael
Nice article on Pattukotaiyar.
Mega samiba kalathirgu munnal than Pattukottaiyaaryai pattri nan therinthu kondean. Ungal katturai ennakku Pattukottai Kalyananam avargalai patri mellum therinthu kolvatharkku uthaviyathu.
Nandri,
Muthuganesh Nagappan
Dear John
thank u for remember and delails about pattukkottai kalyanam. Decause pattukkottaiyin mthuupattukkaal once upon a time but enna acchariam now a days and future or entrum or entraentraikkum poems are suitable.
Dai
Stephen
Michaelpatty
பாட்டுக்கு கோட்டை கட்டிய நம் பட்டுக்கோட்டையாரை நினைவு கூர்ந்தமைக்கு நன்றி! உஙகள் வலைப்பூ மனம் வீச வாழ்த்துக்கள்.
அன்புடன் ஜோதிபாரதி
http://www.jothibharathi.blogspot.com/
Post a Comment