Thursday, October 18, 2007

டிப்பு...டிப்பு...டிப்பு

பார் போற்ற வாழவைக்கும் படிப்பு
பதவிகள் பெற்றுத்தரும் வெறும் நடிப்பு
கொள்கையில் என்றும் வேண்டும் பிடிப்பு
தவறு செய்யும் நண்பனுக்குத் தேவை உன் இடிப்பு

வார்த்தைகளில் இருக்கக் கூடாது தடிப்பு
வயிற்றினிலே தெரியக் கூடாது மடிப்பு
சோதனை வேளையில் வேண்டும் துடிப்பு
சாதனையல்லவே தீவிரவாதக் குண்டு வெடிப்பு

2 comments:

Anonymous said...

அன்பு ஜான்,

அசத்தலான் 'டிப்பு". நல்லா இருக்குங்க.

சூர்யா

Anonymous said...

பாபா படத்தில் வரும் 'டிப்பு டிப்பு டிப்பு டிப்பு ..டிப்பு.....சுந்தரி..... என்ற பாட்டு நினைவு வந்தது ஜான்....அவர்களே....

நல்ல கருத்து!!!...
--
என்றென்றும்
சுதனின் விஜி