பொங்கல் 2006
வாஷிங்டன் வீதியிலே
வாரத்தின் கடைசியிலே
பொழுது சாயும் வேளையிலே
பொங்கிவரும் பொங்கலே!
பொங்கல் சீரு கொண்டு வந்தேன்
பொங்கல் சோறும் பொங்கி வந்தேன்
கரும்புக் கட்டு கிட்டாததால் - உனக்கு
கவிதை ஒன்றைப் படைத்து வந்தேன்!
உழவன் மகனாய் நான் பிறந்தேன்
உழுதுண்டு நான் வாழ்ந்தேன்
இழிதொழில் ஆனது உழவுத்தொழில்
கற்றறிந்தேன் கணினியை
வந்தடைந்தேன் வாஷிங்டனை!
உறவுகளோ அங்கிருக்க - நான்
உழுத நிலமும் அங்கிருக்க
பாசமோ என்னை அங்கிழுக்க
Bank of America Balance-ஓ என்னை இங்கிழுக்க
பாசமா? Balance-ஆ? போட்டியிலே
Pass ஆனதோ Balance-ஏ!
சாயத்துண்டு கட்டிவிட்டு - கட்டிளங்
காளைகளை அவிழ்த்துவிட்டு
வீரம் சொரிய ஓர் வீதியில்லை - வாஷிங்டனில்
எனக்கு வேறு எந்த வழியுமில்லை
காளையின்றிப் பொங்கலா?
கத்தரிக் காயின்றி கல்யாணமா?
கன்னத்தில் கை வைத்தேன்
கணினி மென்பொருளைக் கண்டறிந்தேன்
காளைகளை அவிழ்த்து விட்டேன் - என்
கணினியிலே ஓடவிட்டேன்
Mouse-ஆல் வழிமறித்தேன்
Graphics காளைகளை மடக்கிப் பிடித்தேன்
எத்தனையோ காளைகளை
எதிரில் நின்று அடக்கிவிட்டேன்
எங்கும் இல்லை எனது உடம்பில்
இரத்தக் கசிவு என்று ஒன்று
மாடு பிடித்து மாடு பிடித்து - ஜல்லிக்கட்டில்
மாடு பிடித்து மாடு பிடித்து
காயம் ஆற கட்டுப் போடுவர் எம் காளையர் அங்கே
Mouse பிடித்து Mouse பிடித்து - Graphics ஜல்லிக்கட்டில்
Mouse பிடித்து Mouse பிடித்து
கையில் "இரத்தக் கட்டு" வந்தது எனக்கு இங்கே!
தொலைதூரம் வந்துவிட்டேன்
நாட்டை விட்டு; தமிழ்
நாட்டை விட்டு...
தொலைதூரம் வந்துவிட்டேன்
தொலைந்துபோய் நிற்கின்றேன் - ஆனாலும்
தொப்புள் கொடி உறவதனால்
உனை மறக்க(வே) முடியவில்லை
எனதருமைத் தமிழ் நிலமே
செம்மொழிப் புகழ் மொழியே
உன் பெயரால் கூடியுள்ளோம்
பொங்கல் வைத்துக் கொண்டாட!!!
குறிப்பு: 2006-ல் வாசிங்டனில் நடைபெற்ற பொங்கல் விழாவில் வாசித்தளிக்கப்பட்ட கவிதை
12 comments:
kalakkal kavithai
கவிதை அருமை ஜான்..
வாழ்த்துக்கள்.
எல்லோருக்கும் இதே நிலைமை தான்..
John,
Inniya pongal Vazhthukal
Read the following Kavithai from http://kanapraba.blogspot.com/ thought of share with you.
பாட்டிக்கும் பேரனுக்கும் பொங்கலோ பொங்கல்
கட்டுமஞ்சள் தான் அரைத்து
கதிர்விலக முன் குளிர்நீராடி
பட்டுப்புடவை பிரித்து எடுத்து
பளபளக்கக் கட்டிக் கொண்டு
மொட்டுவிட்ட முல்லை ஆய்ந்து
மொய்குழலுக்குக் கோர்த்துச் சூட்டி
வட்டவடிவப் பொட்டு வைத்து
வார்த்தெடுத்து விழிக்கு மைதீட்டி
சட்டென்று பெட்டி திறந்து
சந்தோஷமாய் நகைநட்டுப் போட்டேன் !
வண்ணமாய்ப் புள்ளி போட்டு
வாசல்பூராக் கோலம் இட்டு
கிண்ணம் நிறையப் பாலெடுத்து
கிளைந்துநெல் அரிசிப்பொங்கல் செய்து
அண்ணல்அடிக்குப் பாத்தொகுத்து
அன்னை மரிக்குப் பூப்படைத்து
உண்ண வாழை இலைநறுக்கி
உவகையாய்ப் பலகாரமுடன் பரிமாறி
எண்ணம் அது மீண்டும்வர
ஏனோபடுக்கையென எழுப்பினேன் பேரனை !
ஏன்பாட்டி எழுப்புகிறாய் என்னை
எமக்கேது பொங்கல் பண்டிகை
பூணூல் போடும் இந்துக்களல்லோ
பூர்வீகமாய்க் கொண்டாடும் தினம்அது
நான்போடும் தூக்கத்தை வந்து
நாலரை மணிக்கேன் குழப்புகிறாய்
தேன்கன்னல் பொங்கல் மட்டும்
தீரமுன் என்பங்கு எடுத்துவைபோதுமென
சாணேற முழம்சறுக்கும் பேரன்
சந்தேகமாய் எனைக் கேட்டான் !
கத்தையாகப் பணம் சேர்க்க
காலைமாலை ஆலாய்ப் பறக்கும்
வித்தை கற்றஎன் மகனது
விளக்கிடப்போது இல்லாக் குறைபோக்க
பொத்தி வளர்க்கும் பேரனுக்கு
பொறுமையாக எடுத்து உரைத்தேன்
புத்தம்புது விதை விதைத்து
பூமித்தாய் அவளிற்கு நீர்பாய்ச்சி
மெத்த வழங்கும் உழைப்பதனால்
மேம்படும்நாளே உழவர் திருநாள் !
பக்குவமாய் விளைச்சல் ஆய்ந்து
பகலவனுக்கு முதற் படைத்து
தக்கமுறையாய் நன்றி சொல்லி
தமிழ் இந்துக்கள் வழிபடுவர்
சொக்கத் தங்க மனத்தோடு
சுவைக் காய்கனியாம் முதற்பயனை
மிக்ககனிவு அன்போடு ஆபேல்
மெய்யிறைக்கு அளித்த காணிக்கையில்
தொக்கிநிற்கும் பொருள் கூறத்
தொல் விவிலியத்தின் துணைகொண்டேன் !
இந்துவாய்ப் பிறந்தால் என்ன
இறைகிறீஸ்துவில் நிறைந்தால் என்ன
எந்தமதத்து வழிமுறை ஆயினும்
எம்இனத்துக் கோட்பாடு ஒன்றாம்
தந்த கொடை அத்தனைக்கும்
தற்பரனடிக்கே முதலுரித்தாம் நன்றி
சிந்தை குளிரக் கொண்டாடுவதே
சீர்தமிழர் திருநாள் பண்பாடென்றதும்
விந்தையுற்ற பேரன் எழுந்து
விழிபூத்திடப் பொங்கலோபொங்கல் என்றான் !
பொங்கல் சீரு----சீறீனா அது கோபமாயிடுமே ஜான்?:)
சும்மா சொல்லக்கூடாது கவிதை
அமக்களம்!
ராகம் போட்டுப் பாடிப்பார்த்தேன் ஜோரா வருது!!!
//உறவுகளோ அங்கிருக்க - நான்
உழுத நிலமும் அங்கிருக்க
பாசமோ என்னை அங்கிழுக்க
Bank of America Balance-ஓ என்னை இங்கிழுக்க
பாசமா? Balance-ஆ? போட்டியிலே
Pass ஆனதோ Balance-ஏ!//
கண்ணில் நீர் வர வைத்தது! :((((((((
சபாஷ். பிரமாதம் போங்க!!
பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
ஆமாம். வாழ்க்கையில் balanace முக்கியம்தானே!
> சாயத்துண்டு கட்டிவிட்டு - கட்டிளங்
> காளைகளை அவிழ்த்துவிட்டு
> வீரம் சொரிய ஓர் வீதியில்லை - வாஷிங்டனில்
> எனக்கு வேறு எந்த வழியுமில்லை
> காளையின்றிப் பொங்கலா?
> கத்தரிக் காயின்றி கல்யாணமா?
பருப்பில்லாமல் கல்யாணமா - தெரியும். கத்தரிக்காயும் கல்யாணத்தில் எப்பொழுதும்
உண்டோ?
என் கவிதை உங்களுக்கெல்லாம் பிடித்திருந்தது அறிந்து மகிழ்கிறேன். நன்றியையும், வாழ்த்துக்களையும் உரித்தாக்கிக்கொள்கிறேன்.
இந்தச் சின்னப்பயலின் பெரிய தவறைக் கண்டு திருத்திய ஷைலஜா அக்காவுக்கு சிறப்பு நன்றி.
பொங்கல் நல்வாழ்த்துகள்
வணக்கம் ஜான்
இன்று தான் உங்கள் வலைப்பதிவு கண்ணிற்பட்டது, உண்மையிலேயே உணர்வு பூர்வமான வரிகள், பொங்கல் வாழ்த்துக்கள் உங்களுக்கு.
anbu niRai John:
Thank you very much for your poem "Pongal Vaazhthu". I enjoyed it very much.
Being from a agricultural family, I can relate to your thoughts. The physical distance that separates us from our India certainly hurts us. Being unable to visit our village whenever we want is a cause of sadness.
However, we can find solace in the fact that we have not lost our Tamil identity because of our living in USA. Sometimes I feel we may be doing more to preserve and promote our glorious language, culture and heritage than our people back iin Tamil nadu / India.
I congratulate you for your brilliant poem. In addition to your literary contribution, you are serving Washington Tamil Sangam as an executive committee member and working hard for the success of our Tamil Sangam activities and functions.
I wish the pongal vizha organized by Washington Tamil Sangam a grand success.
anbudan,
Arasu Chellaiah
கவிதையின் ஐடியா, கருத்து ரெம்ப நல்லா இருக்குது. வாழ்த்துக்கள்.
அப்படியே சாஃப்ட்வேர்ல வெத வெதச்சி நார்று நட்டு களையறுத்து வெவசாயமும் பண்ணிர வேண்டியதுதான்.
:)
Post a Comment